ஷார்ட் நியூஸ் 1 / 10
அரசியல்
ஜனவரி 29,2023
ராகுல் யாத்திரை நாளை நிறைவு
- காங்,., எம்.பி ராகுல் யாத்திரை நாளை ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகரில் நிறைவடைகிறது
- ராகுல், கடந்த செப்.,7 ம் தேதி கன்னியாகுமரியில் யாத்திரையை துவக்கினார்.
- நிறைவு விழாவை மிகவும் பிரமாண்டமாக நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
பொது
ஜனவரி 29,2023
‛‛ 22-30 வயதில் பெண்கள் தாய்மை அடையணும்''
‛‛ 22-30 வயதில் பெண்கள் தாய்மை அடையணும்''
11
- '22 வயதில் இருந்து 30 வயது காலகட்டத்தில் பெண்கள் தாய்மை அடைய வேண்டும்'
- 'அனைத்து விஷயங்களையும் அதற்கு உரிய வயதில் செய்ய வேண்டும்.'
- அசாம் முதல்வர் ஹிந்தா பிஸ்வாவின் பேச்சு சர்ச்சையை கிளப்பியுள்ளது.
உலகம்
ஜனவரி 29,2023
2023ல் இந்தியர்களுக்கு அதிக விசா
2023ல் இந்தியர்களுக்கு அதிக விசா
1
- இந்தியாவில் 2.5 லட்சம் பேருக்கு பி1 மற்றும் பி2 விசாக்கள் வழங்கியுள்ளோம்
- 2023ல் அதிக எண்ணிக்கையில் இந்தியர்களுக்கு விசாவுக்கு ஒப்புதல் அளிக்கபடும்
- மும்பையில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரி ஜான் பல்லார்ட் தெரிவித்தார்.
அரசியல்
ஜனவரி 29,2023
உலகையே வியக்க வைக்கும் உத்திரமேரூர் கல்வெட்டு
உலகையே வியக்க வைக்கும் உத்திரமேரூர் கல்வெட்டு
12
- உத்திரமேரூரில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டு, உலகையே வியக்க வைக்கிறது
- இங்கு 1,100 ஆண்டுகளுக்கு முந்தைய அரசியலமைப்பு குறித்து கல்வெட்டு உள்ளது
- இந்தாண்டின் முதல் 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
பொது
ஜனவரி 29,2023
கோவில் திருவிழா கடைகள்: வாடகை வசூலில் தேவாலயம்
கோவில் திருவிழா கடைகள்: வாடகை வசூலில் தேவாலயம்
9
- மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி திருவிழா பிரமாண்டமாக நடக்கும்
- இதனை வைத்து பணம் சம்பாதிக்க, புனித லுாசியாள் தேவாலயம் இறங்கியுள்ளது
- பேரூராட்சி இடத்தில் வசூல் செய்வதாக இந்து முன்னணி குற்றம்சாட்டியுள்ளது
அரசியல்
ஜனவரி 29,2023
தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் மழை
- வடகடலோர மாவட்டங்கள்,ஒட்டிய பகுதிகளில் இன்று மழை பெய்யக்கூடும்
- ஓரிரு மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பை விட, 2 - 3 டிகிரி குறைவாக இருக்கும்
- சென்னை வானிலை மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் செய்திக்குறிப்பில் தகவல்
அரசியல்
ஜனவரி 29,2023
கருவேல மரம் அகற்றம்: ஐகோர்ட் எச்சரிக்கை
கருவேல மரம் அகற்றம்: ஐகோர்ட் எச்சரிக்கை
5
- சீமைக் கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பான உத்தரவை அமல்படுத்துங்கள்
- 'அமல்படுத்தவில்லை என்றால், அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும்'
- தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது
பொது
ஜனவரி 29,2023
'வட இந்தியர், தென் இந்தியர் வேறுபாடுக்கு ஆதாரம் இல்லை!'
'வட இந்தியர், தென் இந்தியர் வேறுபாடுக்கு ஆதாரம் இல்லை!'
23
- வட இந்தியர், தென் இந்தியர் என்ற வேறுபாடு தொடர்பான ஆய்வுகளில் ஆதாரம் இல்லை
- இந்தியாவின் பண்பாடு, பழம்பெரும் பண்பாடு.ஆனால் வரலாற்றில் அகற்றப்பட்டுள்ளது
- சென்னையில் நடந்த நிகழ்ச்சியில், வரலாற்று ஆய்வாளர் ராஜ் வேதம் கூறினார்
அரசியல்
ஜனவரி 29,2023
முதல்வர் ஆய்வு: பிப்.1ல் வேலூரில் துவக்கம்
முதல்வர் ஆய்வு: பிப்.1ல் வேலூரில் துவக்கம்
4
- 'கள ஆய்வில் முதல்வர்' என்ற புதிய திட்டத்தை முதல்வர் துவக்கி வைக்கிறார்.
- பிப்., 1, 2ம் தேதிகளில் வேலூர் மண்டலத்தில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்
- பல்துறை சார்ந்த திட்டங்களின் செயல்பாடுகள், பயன் குறித்து ஆய்வு செய்கிறார்
அரசியல்
ஜனவரி 29,2023
”கோயிலை இடித்தாலும் ஓட்டு எப்படி வரவைக்கணும் என தெரியும்”
”கோயிலை இடித்தாலும் ஓட்டு எப்படி வரவைக்கணும் என தெரியும்”
55
- "நான்கு வழிச்சாலைக்காக நுாறாண்டு கால கோயிலை இடித்துள்ளேன்."
- "கோயில்களை இடித்தாலும் ஓட்டு எப்படி வரவைக்கணும் என்று தெரியும்''
- மதுரையில் திராவிடர் கழக மாநாட்டில் தி.மு.க., பொருளாளர் டி.ஆர்.பாலு பேசினார்