ஷார்ட் நியூஸ் 1 / 10
பொது
மே 18,2022
இந்தியாவில் மேலும் 1,829 பேருக்கு கோவிட்
- கடந்த 24 மணி நேரத்தில் 1,829 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது
- தற்போது 15,647 பேர் சிகிச்சையில் உள்ளனர். 33 பேர் மரணமடைந்துள்ளனர்
- இதுவரை 191.65 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது
அரசியல்
மே 18,2022
மத உணர்வுகளை தூண்டுகின்றனர் : மாயாவதி
மத உணர்வுகளை தூண்டுகின்றனர் : மாயாவதி
27
- வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு பிரச்னைகள் இருக்கின்றது
- அவற்றை திசைத்திருப்ப மத வழிபாட்டுதலங்கள் பா.ஜ.,வினரால் குறிவைக்கப்படுகிறது
- இந்த சதி குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மாயாவதி கூறினார்
பொது
மே 18,2022
தாயின் பாசப்போராட்டத்தால் கிடைத்த வெற்றி
தாயின் பாசப்போராட்டத்தால் கிடைத்த வெற்றி
64
- அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப்படும்
- விடுதலை தீர்ப்புக்கு பின் இத்திருக்குறளை மேற்கோள்காட்டினார் பேரறிவாளன்
- எனது அம்மா நிறைய வேதனைகளையும், வலிகளையும் அனுபவித்தார் என்றார்
பொது
மே 18,2022
ராஜிவ் வழக்கு: பேரறிவாளன் விடுதலை
ராஜிவ் வழக்கு: பேரறிவாளன் விடுதலை
208
- ராஜிவ் படுகொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளன் விடுதலை
- சட்டப்பிரிவு 142ஐ பயன்படுத்தி உச்சநீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது.
- கவர்னர் முடிவு எடுக்காமல் தாமதப்படுத்தியது தவறு என உச்சநீதிமன்றம் கருத்து
அரசியல்
மே 18,2022
காங்.,கில் இருந்து ஹர்திக் படேல் விலகல்
காங்.,கில் இருந்து ஹர்திக் படேல் விலகல்
17
- குஜராத் சட்டசபைக்கு இந்தாண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது
- காங்.,செயல் தலைவராக இருந்த ஹர்திக் படேல் அக்கட்சியில் இருந்து இன்று விலகல்
- ஹர்திக் காங்கிரசில் இருந்து விலகியது அக்கட்சிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது
பொது
மே 18,2022
மர்ம உலோக உருளைகள் விழுந்ததால் குஜராத்தில் பீதி
மர்ம உலோக உருளைகள் விழுந்ததால் குஜராத்தில் பீதி
6
- குஜராத் கிராமங்களில் இரு நாட்களாக மர்ம உலோக உருளை விழுவதால் மக்கள் பீதி
- இதுதொடர்பாக, இந்திய விண்வெளி ஆய்வு மையத்திடம் ஆலோசனை கேட்கப்பட்டது
- இவை ராக்கெட் பூமிக்கு திரும்பும் போது தீர்ந்த எரிபொருள் உருளைகள் என தகவல்
அரசியல்
மே 18,2022
கழிப்பறைகளை ஆக்கிரமிக்கும் கவுன்சிலர்கள் அடாவடி!
கழிப்பறைகளை ஆக்கிரமிக்கும் கவுன்சிலர்கள் அடாவடி!
30
- சென்னை மாநகராட்சியில் உள்ள கழிப்பறைகளை ஆக்கிரமிப்பதில் கவுன்சிலர்கள் அடாவடி
- தள்ளுவண்டி முதல் அனைத்திலும் லஞ்சம் பெற்று ஆளும்கட்சியினர் அட்டகாசம்
- சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்க மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது
அரசியல்
மே 18,2022
அமர்நாத் யாத்திரை : உள்துறை அமைச்சர் ஆய்வு
- அமர்நாத் புனித யாத்திரை வரும் ஜூன் 30ல் துவங்கி, ஆக., 11 வரை நடக்க உள்ளது
- யாத்திரை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று ஆய்வு செய்தார்.
- போலீசாருடன், 12 ஆயிரம் துணை ராணுவ படை பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
பொது
மே 18,2022
24 மணி நேரத்தில் மீட்டு தந்த பா.ஜ., அரசு
24 மணி நேரத்தில் மீட்டு தந்த பா.ஜ., அரசு
43
- வாரணாசியில் நகரத்தார் அறக்கட்டளையின் ரூ.240 கோடி மதிப்பு நிலம் ஆக்கிரமிப்பு
- சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த பிரமுகர்கள் ஆக்கிரமித்திருந்ததாக புகார் அளித்தனர்
- புகார் அளித்த 24 மணி நேரத்தில் நிலத்தை மீட்டு உ.பி., பா.ஜ.,அரசு சாதனை
அரசியல்
மே 18,2022
நெடுமாறன் மீது பாயும் தி.மு.க.,
நெடுமாறன் மீது பாயும் தி.மு.க.,
56
- முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நிகழ்ச்சியில் அண்ணாமலைக்கு நெடுமாறன் பாராட்டு
- இதனால் பழ.நெடுமாறனை, தி.மு.க.,வினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
- தமிழ் தேசியம் என்பது, ஆர்.எஸ்.எஸ்., உருவாக்கிய செல்லக் குழந்தை என விமர்சனம்