Advertisement

காணாமல்போன தம்பியாக கார்த்தி

'திருஷ்யம், 'பாபநாசம்' படத்தை இயக்கிய மலையாள இயக்குநர் ஜித்து ஜோசஃப் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் 27-ஆம் தேதி கோவாவில் துவங்கியது. பெயரிடப்படாத இந்த படத்தில் ஜோதிகாவும் கார்த்தியும் அக்கா தம்பியாக நடிக்கின்றனர்.
இவர்களுடன் சத்யராஜ், ஆன்சன் பால், இளவரசு, ஹரீஷ் பேரடி ஆகியோர் நடித்து வரும் இந்த படத்தில் 'வெற்றிவேல்', 'கிடாரி' ஆகிய படங்களில் சசிகுமார் ஜோடியாக நடித்த நிகிலா விமலும் நடிக்கிறார். இவர்தான் இந்தப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இப்போது ஊட்டியில் நடந்து வருகிறது.
VIACOM 18 STUDIOS நிறுவனத்தின் பைனான்ஸ் உதவியில் ஜோதிகாவின் சகோதரர் தயாரிக்கும் இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசை அமைக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். கார்த்தியும், ஜோதிகாவும் முதன் முதலாக இணைந்து நடிக்கும் இந்த படம் அக்டோபர் மாதம் வெளியாகும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
சின்ன வயதில் காணாமல்போன ஜோதிகாவின் தம்பி வாலிபனாக திரும்பி வருகிறான். வந்தவன் உண்மையிலேயே தம்பிதானா இல்லையா என்பதுதான் இப்படத்தின் ஒன்லைன்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement