Advertisement

லூசிபர் 50வது நாள் ; மோகன்லால் பிரித்விராஜ் கொண்டாட்டம்

கிட்டத்தட்ட நூறு படங்களுக்கு மேல் கதாநாயகனாக நடித்து விட்ட நடிகர் பிரித்விராஜ் தனக்குள் இருந்த டைரக்சன் ஆசையை வெளிப்படுத்தும் விதமாக, லூசிபர் என்கிற படத்தின் மூலம் இயக்குநராக மாறினார்.. முதல் படத்திலேயே மோகன்லாலை வைத்து இயக்கி அந்த படத்தை மிகப் பெரிய வெற்றிப் படமாகவும் மாற்றிக்காட்டினார். குறிப்பாக இந்தப்படம் மலையாள சினிமாவில் இதுவரை இல்லாத புதிய சாதனைகள் சிலவற்றை படைத்து இதுவரை கிட்டத்தட்ட 200 கோடி ரூபாய் வசூலித்துள்ளது
தற்போது 50 நாட்களை கடந்தும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த படத்தின் வெற்றியை பிரித்விராஜும் மோகன்லாலும் தங்களது மனைவியருடன் சேர்ந்து கொண்டாடியுள்ளனர். இதுகுறித்து பிரித்விராஜ் மனைவி சுப்ரியா மேனன் மோகன்லாலையும் பிரித்திவிராஜையும் 'லூசிபரும் அவரது தளபதியும்' என்கிற அடைமொழியுடன் இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement