Advertisement

விஜய் தேவரகொன்டாவின் 'ஹீரோ' ஆரம்பம்

ஒரே பெயரில் இரண்டு படங்களின் பெயர்கள் ஒரே நாளில் அறிவிக்கப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த மார்ச் மாதம் 13ம் தேதி சிவகார்த்திகேயன் நடிக்கும் 'ஹீரோ' என்ற படமும், விஜய் தேவரகொன்டா நடிக்கும் 'ஹீரோ' என்ற படமும் ஒரே நாளில் அறிவிக்கப்பட்டன.
இத்தனைக்கும் இந்தத் தலைப்பு புதிய தலைப்பும் அல்ல. 1984ம் ஆண்டிலேயே ரகுமான், சுகன்யா நடிக்க 'ஹீரோ' என்ற பெயரில் ஒரு படம் வெளிவந்துள்ளது. சிவகார்த்திகேயன் நடிக்கும் 'ஹீரோ' படத்தை 'இரும்புத் திரை' இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கெனவே ஆரம்பமாகி நடந்து வருகிறது.
விஜய் தேவரகொன்டா நடிக்கும் 'ஹீரோ' படத்தின் படப்பிடிப்பு இன்றுதான் ஆரம்பமாகியுள்ளது. ஆனந்த் அண்ணாமலை இந்தப் படத்தை இயக்குகிறார். நாயகியாக 'பேட்ட' படத்தில் நடித்த மாளவிகா மோகனன் நடிக்கிறார்.
ஒரே நாளில் அறிவிப்பு வெளியிட்ட படங்கள், ஒரே நாளில் வெளிவந்தால்தான் குழப்பமே. என்ன நடக்கப் போகிறது என்பதை இரண்டு படங்களின் படப்பிடிப்பு எப்போது முடிவடையும் என்பதைப் பொறுத்தே இருக்கிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement