Advertisement

தெலுங்கில் குறையும் சூர்யாவின் வியாபாரம்

தமிழ் நடிகர்கள் சிலருக்கு தெலுங்கில் நல்ல வியாபாரமும், வசூலும் இருக்கிறது. ஆனால், சமீப காலங்களில் தமிழ் நடிகர்களின் தெலுங்கு டப்பிங் படங்கள் அதிகமான வசூலைப் பெறவில்லை.
ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா ஆகியோரது தெலுங்கு டப்பிங் படங்களக்கு நல்ல வியாபாரம் நடந்தாலும் வசூல் மிகவும் மோசமாக அமைந்து அவர்களது மார்க்கெட்டைக் குறைத்துள்ளது. இதனால் படத்துக்குப் படம் அவர்களது வியாபாரமும் குறைந்து வருவதாக டோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.
அப்படி பாதிக்கப்பட்டவர்களில் சூர்யாவின் வியாபாரம் பாதியாகப் போய்விட்டது கவனிக்க வேண்டிய ஒன்று. 'கஜினி' படத்திற்குப் பிறகுதான் சூர்யாவுக்கு தெலுங்கில் பெரும் வரவேற்பு கிடைத்தது.அவருடைய '24' படத்தின் டப்பிங் உரிமை 24 கோடிக்கு விற்கப்பட்டதாம். அதன் பின் 'சிங்கம் 3' 18 கோடிக்கும், 'தானா சேர்ந்த கூட்டம்' 15 கோடிக்கும் விற்கப்பட்டுள்ளது. அடுத்து 'என்ஜிகே' படம் வெறும் 9 கோடிக்கு மட்டுமே விற்கப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள்.
'என்ஜிகே' படத்தின் இயக்குனர் செல்வராகவன் என்பதால் அவருக்கும் தெலுங்கில் ஒரு பெயர் உண்டு. அதனால், 'என்ஜிகே' சூர்யாவுக்கு தெலுங்கில் மீண்டும் பழைய மார்க்கெட்டை வரவழைக்கும் என நம்புகிறார்கள்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement