Advertisement

தமிழில் ரீமேக் ஆகும் ஹாலிவுட் படம்

10 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த ஹாலிவுட் படம் தி புரப்போசல். சண்ட்ரா புல்லக், ரெயான் ரெனால்ட்ஸ், பெட்டி வொயிட் உள்பட பலர் நடித்திருந்தார்கள். அன்னே பிளட்சர் இயக்கி இருந்தார். மிகப்பெரிய வெற்றி பெற்ற படம்.
கனடா நாட்டைச் சேர்ந்த சண்ட்ரா புல்லக் நியூயார்க்கில் ஒரு புத்தக வெளியீட்டு நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக இருப்பார். அவரது விசா காலம் முடிந்துவிடுகிறது. அவர் தன் வேலையை விட்டு விட்டு கனடா திரும்ப வேண்டும். ஆனால் சண்ட்ராவுக்கு வேலையில் தொடர ஆசை. அவர் ஒரு அமெரிக்கரை திருமணம் செய்து கொண்டால் தொடர்ந்து அங்கேயே பணியாற்றலாம்.
இதனால் தனது உதவியாளரை திருமணம் செய்து கொள்கிறார். வேலைக்காக திருமணம் செய்து கொண்டாலும் தாம்பத்திய வாழ்க்கைக்கு சம்மதிப்பதில்லை. காரணம் அவருக்கு வேறொரு காதல் இருக்கிறது. இப்படிப் போகும் அந்தக் கதை. ஒரு பாசுக்கும், அவரது உதவியாளருக்குமான ரொமான்ஸ்தான் படத்தின் அடிப்படை. கே.பாக்யராஜ் ஸ்டைல் கதை என்று சொல்லலாம்.
இப்போது இந்த படத்தை தமிழில் சண்டக்காரி என்ற பெயரில் ரீமேக் செய்கிறார்கள். இதனை மதுர, மோகினி படங்களை இயக்கிய ஆர்.மாதேஷ் இயக்குகிறார். தமிழக்கு ஏற்ப கதையில் சில மாறுதல்களை செய்திருக்கிறார்கள். இதில் விமல் ஹீரோ, அவரது பாசாகவும், ஹீரோயினாகவும் நடிக்கிறார் ஸ்ரேயா. பெரும்பகுதி படப்பிடிப்பு லண்டனில் நடக்கிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்

    இப்போதான் ஒரு காப்பி கதையை பத்தி தகவல் படிச்சா ( mousehunt ) இப்போ அடுத்த கதை...இது ஒன்னு ஹாலிவுட் படத்தோட காப்பி அல்ல 2012 மலையாளத்தில் திலீப் நாயகனாக நடித்து வெளிவந்த my boos படத்தின் தழுவல்... நம்ம இயக்குனர்கள் ஹாலிவ்வ்ட் ரேஞ்சுக்கு யோசிக்கறாங்களா போங்க பாஸ் காமெடிய பண்ணிக்கிட்டு...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement