Advertisement

விஜய் பிறந்தநாள் : வித்தியாச சென்னை கொண்டாட்டம்

நடிகர் விஜய்க்கு வரும் 22ல் பிறந்த நாள். அந்த நாளை எப்படியெல்லாம் கொண்டாடுவது என, அவரது ரசிகர்கள் விதம் விதமாக திட்டம் போட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், பிறந்த நாளில் ரசிகர்களுக்காக, விஜய் ஏற்கனவே நடித்த சில படங்களை திரையிடப் போவதாக சென்னையின் இரு தியேட்டர்கள் அறிவித்துள்ளன.

அதன்படி, சென்னை, குரோம்பேட்டையில் இருக்கும் வெற்றி திரையரங்கம், 22ம் தேதி மாலை ஆறு மணிக்கு, விஜய் நடிப்பில் உருவான போக்கிரி படத்தை, ரசிகர்களுக்காக திரையிடப் போவதாக அறிவித்திருக்கிறது. இதை அந்த தியேட்டர் உரிமையாளர் ராஜேஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

அதே போல, சென்னை, கோயம்பேட்டில் இருக்கும் ரோஹிணி திரையரங்கில், விஜய் பிறந்த தினத்தில், அவர் நடிப்பில் உருவான கத்தி மற்றும் போக்கிரி என இரு படங்களை திரையிடப் போவதாக அறிவித்திருக்கிறது. இந்த இரு திரையரங்குகளிலும், விஜய் படத்துக்கான ஆன் -லைன் புக்கிங் நடந்து வருகிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

    இது என்னடா கொடுமை? ஜோசப்பு விசய் எப்போதுப்பா நடித்திருக்கான்?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement