Advertisement

சிக்ஸரில் பாடிய சிவகார்த்திகேயன்

நடிகர், தயாரிப்பாளர், பாடல் ஆசிரியர், பாடகர் என பன்முகத் திறமையும்; தகுதியும் படைத்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். அவர், நடிப்பில் வெளியான மிஸ்டர் லோக்கல் படம் சமீபத்தில் படுதோல்வி அடைந்தது. இருந்தாலும், அதற்காக கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல், அடுத்தடுத்த வேலைகளில் தீவிரமாகி இருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.

வைபவ் ரெட்டி, பல்லாக் லால்வானி, சதீஷ், ராதாரவி ஆகியோர் நடிப்பிலும், இயக்குநர் சாச்சி இயக்கத்திலும் உருவாகும் புதிய படம் சிக்ஸர். அந்தப் படத்துக்கு இசையமைப்பவர் ஜிப்ரன். அவர், நடிகர் சிவகார்த்திகேயனை, சிக்ஸர் படத்துக்காக ஒரு பாடல் பாட வேண்டும் என அழைக்க, மறுக்காமல் ஒப்புக் கொண்டாராம் சிவகார்த்திகேயன். ஒப்புக்கொண்டபடியே, பாடல் ஒன்றை பாடியும் கொடுத்திருக்கிறார். இது இசையமைப்பாளர் ஜிப்ரனை நெகிழ வைத்திருக்கிறது.

இது குறித்து இசையமைப்பாளர் ஜிப்ரன் ட்விட்டர் பதவில் கூறியிருப்பதாவது: நடிகர் சிவகார்த்திகேயன் பண்பாடுள்ள மனிதர். மிகச் சாதாரணமாக தன்னைக் காட்டிக் கொள்கிறவர். அவர், சிக்ஸர் படத்துக்காக ஒரு பாடல் பாட வேண்டும் என விரும்பினேன். அதை அவருடன் சொன்னதுமே, மறுக்காமல் அதை ஏற்றுக் கொண்டார். சொன்ன நேரத்துக்கு வந்து பாடிக் கொடுத்தார். அவர் மிக அற்புதமான மனிதர்.
இவ்வாறு, அவர் கூறியிருக்கிறார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Mani . V - Singapore,சிங்கப்பூர்

    சரி ஜிப்ரான், சிவகார்த்திகேயன் பாடல் பாடியதற்கு காசு வாங்கினாரா? அல்லது இலவசமாக பாடி கொடுத்தாரா? (கா.....கா......கா......கா.....கா, சை இந்த காக்காய் தொல்லை தாங்க முடியவில்லை).

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement