Advertisement

வேதாளம் இந்தி ரீமேக்கில் ஜான் ஆப்ரகாம்

அஜித், சிவா கூட்டணியில் உருவான நான்கு படங்களில் இரண்டாவதாக உருவான படம் வேதாளம். தங்கை சென்டிமென்ட் கலந்து உருவாக்கப்பட்டிருந்த இந்த படம் வெளியானபோது கலவையான விமர்சனங்களை பெற்றாலும் கூட, அஜித் ரசிகர்களை மட்டுமின்றி வசூல் ரீதியாக தயாரிப்பளர்களையும் திருப்திப்படுத்தியது.

கடந்த 2018ல் சுல்தான் தி சேவியர் என்கிற பெயரில் பெங்காலியில் ரீமேக் செய்யப்பட இந்தப்படம், இந்தியிலும் ரீமேக் செய்யப்பட இருப்பதாக சில மாதங்களுக்கு முன் ஒரு பேச்சு அடிபட்டு வந்தது.

இந்நிலையில் இந்தப்படத்தின் இந்தி ரீமேக்கில் அஜித் கேரக்டரில் ஜான் ஆப்ரகாம் நடிக்க இருக்கிறார் என தெரியவந்துள்ளது. பிரபல தயாரிப்பாளர் பூஷன்குமார் இந்தப்படத்தின் இந்தி ரீமேக் உரிமையை வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement