Advertisement

மேடையிலேயே கதறி அழுத அருண்பாண்டியனின் மகள்

கனா படத்தில் நடித்த தர்ஷன் நாயகனாக நடித்துள்ள அடுத்த படம் தும்பா. இந்த படத்தில் நாயகியாக நடிகர் அருண்பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் அறிமுகமாகிறார். ஹரிஷ்ராம் இயக்கியுள்ள இந்த படம் முழுக்க காட்டுக்குள் நடக்கும் கதையில் உருவாகியிருக்கிறது.

இந்தபடத்தின் பிரஸ்மீட் சென்னையில் நடைபெற்றது. அப்போது நடிகை கீர்த்தி பாண்டியன் பேசும்போது, நான் நடிக்க வந்தபோது சில கதைகளை வேண்டாம் என்று தவிர்த்துள்ளேன். அதோடு என்னையும் சில டைரக்டர்கள் நிராகரித்துள்ளார்கள். எனது ஒல்லியான தோற்றம் மற்றும் கலரை வைத்து தான் என்னை நிராகரித்தார்கள்.

இருப்பினும் என் திறமை மீது நம்பிக்கை வைத்து எனக்கு வாய்ப்பு கொடுத்தவர்தான் இந்த தும்பா இயக்குநர் ஹரிஷ்ராம் என்று சொல்லும்போதே கண்கலங்கிய கீர்த்தி பாண்டியன், சிறிது நேரம் பேச முடியாமல் தடுமாறிப்போய் நின்றார்.

அதன்பிறகு படக்குழுவினர் தேற்றி அவரை பேச வைத்தபோது, இந்த படத்திற்காக நான் ஷாட்ஸ் அணிந்தபோது அது எனக்கு செட்டாகவில்லை. ஆனால் டைரக்டர் எனக்கு மன தைரியம் கொடுத்து என்னை நடிக்க வைத்தார். என் மீது நம்பிக்கை வைத்த அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்று உணர்வுப்பூர்வமாக பேசினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (8)

  • skv(srinivasankrishnaveni) - Bangalore,இந்தியா

    பெண்ணே கருப்பு என்று நீ மட்டும் இல்லேம்மா பலரும் மெய்யான வாழ்க்கையிலேயும் வெறுத்து ஒதுக்கப்படுறாங்களே தெரியுமா ?ஒரு தோழிக்கு அவள் நிறம் கம்மி என்று வேலைக்கே போகாத ஒரு முழுசோம்பேறிக்கு கட்டிவச்சாங்க அவள் பாட்டி, தெரியுமா பாட்டி எழுவத்தஞ்சுவயசுலே செத்தாங்க பேத்தி தன் 70 வயதுலே அந்த சோம்பேறியுடனே வாழ்ந்து செத்தா. மகள் இருவர் படிச்சுவேலைக்குவந்து பெற்ரோரைக் காப்பாற்றினா ஆனால் சாவும் வரை அந்த மனுஷன் வேலைக்கே போவளே

  • Yuva Rajan - chennai,இந்தியா

    உன் மேல் தப்பு இல்ல அம்மா தமிழ் ரசிகர்கள் தமிழ் தமிழ் என்று சொல்லி கலரா இருக்கிற கேரளா பொண்ணுங்க பின்னாடி போறது தான் தப்பு

    • uthappa - san jose,யூ.எஸ்.ஏ

      தமிழ் ரசிகர்களை குறை சொல்லாதீங்க, தமிழ் போராளி இயக்குனர்களை சொல்லுங்க. பொண்ணுங்களுக்கு இவனுங்க தமிழ் நாட்டில் தேட மாட்டாங்க. இவனுங்க சாயம் தெரிந்து விடுமே.

  • muthu Rajendran - chennai,இந்தியா

    நன்று விசுவாசமாக இருங்கள். விஜயகாந்திடம் இருந்தவர்கள் எப்படி விசுவாசமாக இருந்தார்கள் என்பதை வைத்துதான் சொல்ல வேண்டியிருக்கிறது.

  • சந்தோஷ் -

    ஒல்லியான உருவம், shorts போட்டும் செட் ஆகலை, கலர் இல்லை ஆனா நடக்க மட்டும் ஆசை இருக்கு

  • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

    ஒல்லியான தோற்ற்றம் தானே அழகு? உலகம் ஒரு முறையில் சிந்திக்கும்போது தமிழ் மக்கள் வேறுவிதமாக சிந்திக்கிறார்கள். இது அண்மையில் நடந்த பாராளுமன்ற தேர்தலிலேயே தெரிந்தது. உலகத்தோடு ஒட்ட ஒழுகல்.. என்ற திருக்குறளை மறப்பது நன்றன்று.

    • Vijay - Bangalore,இந்தியா

      யாருடா இவன் ... ஒவ்வ்ருத்தருக்கு ஒவ்வொன்னு அழகா தெரியும் . இவ்வளவு பேசுற உனக்கு இந்தியாவில் வோட் உரிமை இருக்கா

  • jayanantham - tamilnaadu ,இந்தியா

    கண் கலங்குறதுக்கும் கதறி அழறதுக்கும் ரொம்ப வித்தியாசம் இருக்கு. பில்டப் பண்றதுக்கு அர்த்தம் புரியனும்....

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement