Advertisement

ஆகஸ்ட்டில் 'அஜித் 60' ஆரம்பம்

'விஸ்வாசம்' படத்தைத் தொடர்ந்து அஜித் நடித்துள்ள 'நேர்கொண்ட பார்வை' ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாக உள்ளது. இதில் மாற்றம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்தப் படத்தை வினோத் இயக்கியுள்ளார். இதற்குப் பிறகு மீண்டும் வினோத்தின் இயக்கத்தில் அஜித் தன் 60வது படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தையும் 'நேர்கொண்ட பார்வை' படத்தைத் தயாரித்த போனி கபூர்தான் தயாரிக்க உள்ளார்.

படத்திற்கான ஆரம்ப கட்ட வேலைகள் ஏற்கெனவே ஆரம்பமாகிவிட்டன. படத்தில் அஜித் கார் ரேஸர் ஆக நடிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஆகஸ்ட் மாதம் படத்தின் பூஜை நடைபெறுகிறது. படப்பிடிப்பை செப்டம்பர் மாதம் முதல் வைத்துக் கொள்ளலாம் என அஜித் சொல்லியிருக்கிறாராம். ஒரு படத்திற்கும் அடுத்த படத்திற்கும் சரியான இடைவெளி கொடுப்பது அஜித் வழக்கம். மேலும் கார் ரேஸர் ஆக நடிக்க உள்ளதால் அவர் மீண்டும் அதற்கான பயிற்சியில் இறங்க உள்ளதாகவும் தெரிகிறது.

அஜித் நடித்த முடித்துள்ள 'நேர்கொண்ட பார்வை' படத்தை விலைக்கு வாங்குவதைவிட அஜித்தின் 60வது படத்தை வாங்கத்தான் வினியோகஸ்தர்கள் இப்போதே தயார் என்கிறார்கள். இருந்தாலும், 'நேர்கொண்ட பார்வை' படத்தை வாங்கும் வினியோகஸ்தர்களுக்கு அஜித் 60 படத்திலும் முன்னுரிமை தரலாமா என போனி கபூர் யோசித்து வருகிறாராம்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement