Advertisement

புதிய கல்வி கொள்கை - சூர்யா பேசினாலும் மோடி கேட்பார் : ரஜினி

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள, ‛காப்பான்' படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று(ஜூலை 22) இரவு நடந்தது. சூர்யா புதிய கல்வி கொள்கை குறித்து தெரிவித்த கருத்துக்கள் பரபரப்பை கிளப்பிக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்த விழா நடப்பதும், அதில் ரஜினி கலந்து கொள்வதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

சூர்யாவின் கருத்தை கமல்ஹாசன் வரவேற்றதோடு அவருக்கு துணையாக நிற்பேன் என்றும் அறிவித்து விட்டார். ரஜினி சூர்யாவின் கருத்தை ஆதரிப்பாரா? என்ற கேள்விக்குறியுடன் விழா நடந்தது. எதிர்பார்த்தபடியே சூர்யாவின் கருத்தை ஆதரிப்பதாக அறிவித்தார் ரஜினி. விழாவில் அவர் பேசியதாவது:

சூர்யா விடா முயற்சியில் முன்னேறி இருக்கிறார். நேருக்கு நேர் படத்தில் அவர் நடிப்பை பார்த்து விட்டு இவர் நடிகராக தேறுவாரா என்றுதான் நினைத்தேன். அதன் பிறகு நந்தா, பிதாமகன் படங்களில் மிரட்டினார். இன்றைக்கு சிறந்த நடிகராக வளர்ந்து நிற்கிறார். தன்னை தானே செதுக்கி உயர்ந்த இடத்திற்கு வந்திருக்கிறார். சூர்யாவையும், கார்த்தியையும் ஒழுக்கமான பிள்ளைகளாக சிவகுமார் வளர்த்திருக்கிறார்.

சமீபத்தில் புதிய கல்வி கொள்கை பற்றி சூர்யா கூறிய கருத்துகள் சர்ச்சை ஆனது. இங்கே பேசியவர்கள் இதே கருத்தை ரஜினிகாந்த் பேசியிருந்தால் மோடி கேட்டிருப்பார் என்றார்கள். சூர்யா பேசினாலும் மோடி கேட்பார். சூர்யாவின் கருத்தை நான் ஆதரிக்கிறேன்.

அகரம் பவுண்டேஷன் மூலம் நிறைய உதவிகள் செய்து வருகிறார். மாணவர்களின் கஷ்டங்களை நேரில் பார்த்த அனுபவம் அவருக்கு இருக்கிறது. அவர் பேசும் கருத்துக்கள் வரவேற்கதக்கவை. எதிர்காலத்தில் அவரின் சேவை நாட்டுக்கு தேவையாக இருக்கும்.

இவ்வாறு ரஜினி பேசினார்.

விழாவில் நடிகர்கள் மோகன்லால், சிவகுமார், ஆர்யா, இயக்குனர் ஷங்கர், தயாரிப்பாளர் சுபாஷ்கரன், நடிகை சாயிஷா, இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (22)

 • skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா

  சொன்னது தப்பே இல்லேங்க ஆனால் அதை ஏற்பதும் மறுப்பதும் மந்திரிகள் கடமை கல்வி லே மட்டும்தான் விளையாடவே முடியும் எல்லா மந்திரிகளும் உதாரணம் (கல்வி மந்திரிகள்)கருத்து கூறும் உரிமை மக்கள் லே ஒருவராக சூர்யாக்கு இருக்கு

 • swega - Dindigul,இந்தியா

  சூர்யா அவர்களே உங்கள் கருத்துகளை அரசியல்வாதி மாதிரி மேடையில் மட்டும் பேசாமல் எழுத்து பூர்வமாக மத்திய கல்வித்துறைக்கு தெரிவியுங்கள். Be the inspiration for the younger generation. Don't speak anything for publicity. As you are a public figure, you have plenty of fans and followers with age of below 20 who follow you blindly. So, be cautious before delivering as they would be misled

 • அசோகா -

  வார்

 • BoochiMarunthu - Paradise papers,பனாமா

  நான் அப்படி சொல்லவில்லை இப்படி தான் சொன்னேன் என்று நாளைக்கு மீண்டும் ஓர் பிரஸ் மீட் வைத்து மோடியை ,புதிய கல்வி கொள்கையை பாராட்ட போகிறார் .

  • uthappa - san jose,யூ.எஸ்.ஏ

   தற்போது உள்ளது வரைவு கொள்கை...அரசிடம் இதை அதற்க்காக அமைக்கப்பட்ட குழு சமர்பித்துள்ளது....தற்போதுள்ள வரைவு கொள்கை அரசின் முடிவல்ல.... இந்த வரைவு கொள்கை மீது விரும்பும் அனைவரும் தங்களுடைய கருத்துக்களை, ஆலோசனைகளை ஜூலை மாதத்திற்க்குள் தெரிவிக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.... நடிகர்களானாலும் சரி அல்லது வேறு கல்வியாளர்களானாலும் சரி அரசுக்கு தங்கள் ஆலோசனைகளை கருத்துக்களை தாராளமாக தெரிவிக்கலாம்... அதைத்தான் ரஜனி "சூர்யா சொன்னாலும் மோடி கேட்பார்" என்று சொல்லி இருக்கிறார். பார்ப்போம் இப்போது கூட்டங்களில் மைக்கில் மட்டுமே பேசும் நபர்கள் எத்தனை பேர் ஆக்க பூர்வமான முறைபடி ஆலோசளைகளை வழங்கினார்கள் என்பது தெரிய வரும். அப்போது நமக்கு இவர்களை சரியாக புரிந்து கொள்ள வாய்பாக அது அமையும்...

 • Prasad - London,யுனைடெட் கிங்டம்

  ரஜினிக்குதான் அவர் அரசியலில் பிரகாசிக்க மோடி தயவு தேவை , மோடிக்கு ரஜினி தேவை இல்லை. இரண்டு முறை ஏற்கனவே ஜெயித்து விட்டார் . தமிழ்நாட்டின் ஆதரவு மோடிக்கு தேவையே இல்லை. நம்ம ஆட்கள் நடிகர்களின் பன்ச் டயலாக் கேட்டு கொண்டு , அரசியல், பத்திரிகை வியாதிகளின் கருத்துக்களை படித்து கொண்டு தொடர்ந்து தங்கள் தலையில் மண்ணை போட்டு கொள்ளலாம் , ஒரு பிரச்னையும் இல்லை

 • grg - chennai,இந்தியா

  what i heard: surya is questioned about the funding for his trust. so suddenly he has jumped into questioning the new policy. is he more educated than the ppl who framed this policy? only in tn cine actors jump for every field.

 • Tamil Selvan - tamilnadeu,இந்தியா

  அய்யா சூப்பர் ஸ்டார் உங்களது கருத்து என்ன ? என்பதை சொல்லவில்லையே.....

 • rmr - chennai,இந்தியா

  கூத்தாடிங்க பேச்சை கேட்டு தான் தமிழகத்தின் கலாச்சாரம் அழிந்தது . மக்கள் இவர்களை புறக்கணிக்க வேண்டும்

  • Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்

   சாத்தியமா எனக்கு புரியல....கலாச்சாரம் கலாச்சாரம்ன்னு நெறையபேரு பேசிக்கிறாங்க...அந்த கலாச்சாரம்ன்னா என்ன கொஞ்சம் விரிவா விளக்கமுடியுமா?

 • Nallappan Kannan Nallappan - Perambalur,இந்தியா

  ஆனா அது சரியான கருத்து என்று இருந்தா தான் இந்த மாதிரி தெரியாத விஷயத்துக்கு கருத்து சொல்லக்கூடாது தமிழ் தமிழ் இன்னு மாணவர்களையும் மக்களையும் முட்டாளாக்கக்கூடாது

 • Subburamu Krishnaswamy - Coimbatore,இந்தியா

  நானும் அரசியல் வாதிதான் நானும் அரசியல்வாதிதான் நம்புங்கள் தமிழர்களே. வடிவேலுக்கு போட்டியா எல்லாரும் கிளம்பிட்டாங்க

  • Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்

   நானும் ஒட்டு போடல , நானும் ஒட்டு போடல....ஓட்டை போடாத நெறயப் பேரு இங்கே கருது கந்தசாமிங்கல இருக்காங்க...நான் உங்கள சொல்ல சுப்பு...

 • Jayvee - chennai,இந்தியா

  சூர்யாவின் படங்கள் எல்லாம் தோல்வி.. மினிமம் காரண்டீ லிஸ்டிலிருந்து தூக்கி எறியப்பட்டுள்ளார்.. வேறு வழி .. தமிழனை குழப்பும் ஆயுதம் தான் இது.. ரஜினிக்கும் பயம்.

  • Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்

   ஆமாம் சார் ரஜினிக்கு ரொம்ப பயம்.. படம் தோல்வின்னா இனிமே படமே கிடைக்காது சாப்பாட்டுக்கு சிங்கி அடிக்கணும்ன்னு பயப்படுறாரா பாருங்க... யோவ் 2.௦ பட சூட்டிங்கில் உடம்பு முடியல வேறுயாரையாவது வச்சு எடுங்கன்னு சொன்னதுக்கு வட நாட்டான், வெளிநாட்டு விநியோகித்தார் ரஜினி இல்லையா படம் வாங்க மாட்டன்னுட்டான்...யாரை நம்பி 400 கோடி முதல் போடுறது? வேற வழியில்லாமல் சார் எவ்வளவு நாள் ஆனாலும் பரவாயில்லை...நீங்கதான் நடிக்கணும்ன்னு சொல்லி நடிக்கவச்ச படம்...ரொம்ப பயம் தலைக்கு...

  • JMK - Madurai,இந்தியா

   ரஜினியை தவிர 2.0 யார் நடிச்சாலும் நுறு கோடி தாண்டியிருய்க்காது? விஜய் / அஜித் நடித்திருந்தால் படம் ஒரு வாரம் ஓடியிருக்காது என்பது லைக்கா தயாரிப்பாளருக்கு நன்றாகவே தெரியும் ?

 • Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்

  இவர்கள் எம்ஜிஆர் ஆக முடியாது. பொது இடங்களில் தங்கள் சினத்தைக் காட்டுபவர்கள் மக்களால் ஒதுக்கி வைக்கப்படுவர்.

  • Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்

   நாங்க எதுக்கு எம் ஜி ஆர் ஆகணும்? ADMK இல் சேரச்சொல்றீங்களா? நாங்க நாங்கள இருக்கோம்...மக்கள் ஒதுக்கி வைக்கறாங்களா இல்லையாங்கிறதா தேர்தலில் தெரியும்...

  • அப்பாவி - coimbatore,இந்தியா

   பொது இடங்களில் toilet தான் போகக்கூடாது. அநீதி எப்பொழுதெல்லாம் வருதோ சினம் மிக அவசியம். எதுக்கு இன்னொரு எம் ஜி ஆர்? இன்னொரு அடிமை கூட்டத்தை உருவாக்கவா?

 • தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா

  //எதிர்காலத்தில் சூர்யாவின் சேவை நாட்டுக்கு தேவை...// இதுக்கு பேருதான் PUNCH dialogue 👏👏👏 Its 1000% TRUE 👍👍👍

 • தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா

  உண்மைய சத்தம்போட்டு சொன்ன சிவாஜி ராவ் கெய்க்கவாட இன்னிக்கி பிராண்டி எடுக்கப்போவுது சவடால் கூட்டம் 😖😖😖

  • எதிர்க்குரல் - சிங்கார சென்னை ,இந்தியா

   இல்லைண்ணே சத்தமே இல்லாமல் கழண்டு கொள்வார்கள். அதே நேரம் அப்படியே மோடியை ரஜினி நிச்சயம் ஆதரிப்பார் என்று மட்டும் கோரஸாக சத்தம் போடுவார்கள்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement