Advertisement

சூர்யா பேச்சு எனக்கு தெரியாது: ஷங்கர் நழுவல்

நடிகர் சூர்யா மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை குறித்து பேசியது, அரசியல் வட்டாரங்களில் புயலைக் கிளப்பி இருக்கிறது. அவருக்கு ஆதரவாகவும்; எதிர்ப்பாகவும் கருத்துக்களைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர். தன்னுடைய கருத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் மக்களுக்கு அவர் நன்றியும் தெரிவித்தார்.

நடிகர் கமல், சூர்யாவின் கருத்தை வரவேற்றார். இது குறித்தெல்லாம், இயக்குநர் ஷங்கரிடம் கேட்டபோது, 'நடிகர் சூர்யா அப்படியெல்லாம் பேசினாரா? புதிய கல்விக் கொள்கை குறித்து அவர் என்ன பேசினார் என்று தெரியாது. அதனால், அதன் மீது நான் எந்தக் கருத்தும் சொல்ல முடியாது' என கூறியிருக்கிறார்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement