Advertisement

ராஜ்குமார் குடும்பத்தில் இருந்து ஒரு நடிகை

மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமாரின் மொத்த குடும்பமும் சினிமா உலகைச் சேர்ந்ததுதான். ராஜ்குமாரின் தந்தை சிங்கநல்லூரு புட்டசாமியாவும் ஒரு நடிகர்தான். ராஜ்குமாரின் ஐந்து மகன்களும் நடிகர்கள்தான். அவரது மகள் பூர்ணிமாவின் கணவர், அதாவது மருமகனும் ஒரு நடிகர்தான்.

இந்நிலையில், பாட்டன், தாத்தா, ஐந்து தாய் மாமன்களுக்கு பின், இப்போது ராஜ்குமார் குடும்பத்தில் இருந்து ஒரு நடிகை வந்திருக்கிறார். அதாவது, ராஜ்குமாரின் மகள் பூர்ணிமாவின் மகளான தான்யா ராஜ்குமார் நடிக்க வந்திருக்கிறார்.

நடிகர் கமலின் உத்தம வில்லன் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய சுமன் என்பவர் கன்னட படம் ஒன்றின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆகிறார். 'நின்னா சனிஹகே' என அந்தப் படத்துக்குப் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. ரொமாண்டிக் மற்றும் காமெடியாக எடுக்கப்படும் அந்தப் படத்தின் நாயகியாகத்தான், இந்த தான்யா ராஜ்குமார் நடிப்பைத் துவங்குகிறார். அவரது சகோதரர் தீரண், 'தாரி தப்பிடா மகா' என்ற படத்தில் நாயகனாக நடிக்கிறார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • நபிகள் நாயகம் - ,

    யாராவது தனது பெயருடன் ... தாத்தா பெயரை இணைத்து வைத்துக்கொள்வார்களா?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement