Advertisement

அதிக விலையால் 'பிகில்' தியேட்டர்களுக்கு சிக்கல்?

Share

அட்லீ இயக்கத்தில் விஜய், நயன்தாரா மற்றும் பலர் நடித்துள்ள 'பிகில்' படம் இந்த வாரம் அக்டோபர் 25ம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தை விஜய்யின் முந்தைய படங்களின் விலையை விட அதிக விலை கொடுத்து வினியோகஸ்தர்கள் வாங்கி இருக்கிறார்களாம். அதனால், படத்தை வெளியிட விரும்பும் தியேட்டர்காரர்களிடம் அதிக விலையை 'டிமான்ட்' செய்வதாக கோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.

இதனால், வழக்கமாக விஜய் படங்களை வெளியிடும் சில தியேட்டர்களும், புதிய படங்களை வெளியிடும் தியேட்டர்களும் 'பிகில்' படத்தைப் வாங்க தயங்குவதாக தகவல்கள் வெளிவருகின்றன.

மேலும், 'பிகில்' படத்திற்கான ஆன்லைன் முன்பதிவு ஆரம்பமாகி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முன்பதிவு ஆரம்பமான தியேட்டர்களில் ஆன்லைன் முன்பதிவில் வழக்கத்தை விட அதிகமான கட்டணம் வாங்குவதாக பலரும் குற்றம் சாட்டுகிறார்கள்.

இவற்றை அரசு நிர்வாகம் கவனித்து அதிக விலைக்கு டிக்கெட்டை விற்கும் தியேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement