Advertisement

இலங்கை தமிழர் வாழ்க்கையை சொல்லும் பயணங்கள் தொடர்கிறது

Share

நேமி புரொடக்சன்ஸ் சார்பில் டாக்டர் அமர் ராமச்சந்திரன் தயாரித்து, நடிக்கும் படம் பயணங்கள் தொடர்கிறது. தந்தை மகள் பாசப் பின்னணியில் உருவாகியிருக்கும் இந்த படத்தை அபிலாஷ் இயக்கியுள்ளார். படம் பற்றி அவர் கூறியதாவது:

போர் மூளும் சூழலில் இலங்கையிலிருந்து தமிழகம் வந்து உறவினர் வீட்டில் தனது மகளை ஒப்படைத்துவிட்டுச் செல்வதற்காக தமிழகம் வருகிறார் தந்தை. ஆனால் உறவினர்கள் அவரது மகளை தங்களுடன் வைத்துக்கொள்ள மறுத்துவிட தந்தையும் மகளும் தெருவில் தங்கும் சூழல் ஏற்படுகிறது.

அப்படிப்பட்ட சூழலிலும் தாங்கள் பறவைகள் போல சுதந்திரமாக சிறகடித்து பறக்கும் மனநிலைக்கு தங்களை மாற்றிக் கொள்கிறார்கள் இந்த இருவரும். இந்த சூழ்நிலையிலும் ஒரு தந்தை தனது மகளின் சந்தோஷத்திற்காக என்னவெல்லாம் செய்யமுடியும் என்பதை இந்தப்படம் அழகாக சொல்லியிருக்கிறது. என்றார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement