Advertisement

தமிழில் ரீமேக் ஆகும் ஹிந்தி ஹேர் இஸ் பாலிங்

அகரம் என்ற படத்தை ஒரே ஷாட்டில் எடுத்து புகழ்பெற்றவர் இயக்குனர் இசாக். அதன் பிறகு நாகேஷ் திரையரங்கம் என்ற படத்தை இயக்கினார். தற்போது அவர் இயக்கும் படத்தின் பெயர் சொட்ட. இது இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற ஹேர் இஸ் பாலிங் என்ற படத்தின் அதிகாரபூர்வ ரீமேக் ஆகும்.

மேன்டியா பிலிம் புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கிறது. ஜெமினி ரெய்கன் என்பவர் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஹீரோயின் உள்ளிட்ட மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. ஜெ.ஷமீல் இசை அமைக்கிறார் ரத்தீஷ் கண்ணா ஒளிப்பதிவு செய்கிறார்.

படம் பற்றி இசாக் கூறியதாவது: இளம் வயதிலேயே தலைமுடி உதிரும் இளைஞன் ஒருவன் தன் வாழ்வில் காதல், தொழில் இரண்டிலும் தோல்வியடைகிறான். அதே இளைஞன் எப்படி மீண்டும் தனது வழுக்கை தலையுடன் காதல், தொழில் இரண்டிலும் வெற்றி பெறுகிறான் என்பதை நகைச்சுவையுடன் சொல்லும் கதை. என்றார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement