Advertisement

கோல்டன் குளோப் விருது முயற்சியில் பார்த்திபன்!

நடிகரும் இயக்குநருமான பார்த்திபன், தானே, நடித்து, இயக்கி, கதை எழுதி, திரைக்கதை அமைத்து வெளியிட்டப் படம் ஒத்த செருப்பு சைஸ் 7. இந்தப் படத்தில் ஒரே ஒரு கேரக்டர்தான் அமைக்கப்பட்டிருக்கிறது. மொத்தப் படத்திலும் ஒரே ஒரு கேரக்டர்தான் இருக்கும்படியாக திரைக்கதை அமைத்து, அந்த கதையில் தானே மிக அற்புதமாக நடித்து, படத்தை தயாரித்து வெளியிட்டிருக்கிறார் பார்த்திபன்.

இதற்காக, பல தரப்பில் இருந்து அவர் பாராட்டுதல்களை பெற்று வருகிறார். இந்நிலையில், அவர், அமெரிக்காவின் கோல்டன் குளோப் விருதுக்காக, ஒத்த செருப்பு படத்தை அனுப்பும் முயற்சியில் தீவிரமாகி இருக்கிறார். இதற்காக, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸுக்கு அவர் போயிருப்பதாகவும் தகவல் வெளியிட்டிருக்கும் பார்த்திபன், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் ஹர்கின் செரிடாஸ் திரையரங்கில் ஒத்த செருப்பு படம் திரையிட இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். கூடவே, அந்த நிகழ்ச்சியில் தானும் கலந்து கொள்ள இருப்பதால், அந்த நிகழ்ச்சியின் போது, தன்னை அமெரிக்க ரசிகர்கள் வந்து சந்திக்கலாம் என்றும், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • sathish - Chennai,இந்தியா

    Hard work never fails, Tamilan ku vetri kidaikum. All the best.

  • VELAN S - Chennai,இந்தியா

    தமிழனின் அரிய முயற்ற்சி வெற்றி பெறட்டும் .

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement