Advertisement

தனுஷ் படத்தில் சண்டக்கோழி வில்லன்

Share

கடந்த வருடம் பா.ரஞ்சித் தயாரிப்பில், கதிர் நடிப்பில் குறைந்தபட்ச செலவில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியையும் அதிர்வலைகளை ஏற்படுத்திய படம் பரியேறும் பெருமாள். இந்த படத்தின் மூலம் இயக்குனர் மாரி செல்வராஜ் முன்னணி ஹீரோக்களை வைத்து இயக்கும் அளவிற்கு உயர்ந்தார். அந்த வகையில் இவர் தனது அடுத்த படத்தில் தனுஷை கதாநாயகனாக வைத்து இயக்க இருக்கிறார்.. தாணு இந்த படத்தை தயாரிக்கிறார்..

இந்த படத்தில் கதாபாத்திரங்களின் தேர்வில் மிக தீவிரமாக கவனம் செலுத்தி வரும் மாரிசெல்வராஜ், படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் சண்டக்கோழி படத்தில் வில்லனாக நடித்து தமிழில் புகழ்பெற்ற, மலையாள நடிகர் லாலை நடிக்க வைக்க இருக்கிறாராம். இந்த படத்தின் கதாநாயகியாக மலையாளத்தில் தற்போது அறிமுகமாகி வளர்ந்து வரும் ரஜிஷா விஜயன் நடிக்க உள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement