Advertisement

குழந்தையின் முகத்தை வெளியுலகிற்கு காட்டினார் திலீப்

மலையாள திரையுலகில் மோகன்லால், மம்முட்டிக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் நடிகர் திலீப்.. இவரும், நடிகை மஞ்சுவாரியரும் 1998ல் காதல் திருமணம் செய்து கொண்டனர்.. இவர்களுக்கு மீனாட்சி என்கிற மகளும் இருக்கிறார். இந்த நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 2௦15ல் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இந்த விவாகரத்திற்கு முக்கிய காரணமாக கிசுகிசுக்கப்பட்ட நடிகை காவ்யா மாதவனை, கடந்த 2016 நவம்பரில் இரண்டாவது திருமணம் செய்தார் நடிகர் திலீப்.

இதையடுத்து, கடந்த வருடம் அக்டோபர் மாதம் இவர்களுக்கு அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்தது.. இதற்கு மகாலட்சுமி என பெயர் சூட்டினார்கள். இந்த குழந்தையை கடந்த ஒரு வருட காலமாக வெளியிடங்களுக்கு அழைத்து வராமல், மீடியா வெளிச்சம் படாமல் பாதுகாத்து வந்தனர் திலீப்-காவ்யா மாதவன் தம்பதியினர்.

இந்தநிலையில் நேற்று குழந்தையின் முன்தினம் முதல் பிறந்த நாளை ஒட்டி அந்த கொண்டாட்டத்தின் மூலம் அதனுடைய முகத்தை வெளியுலகிற்கு காட்டியுள்ளனர். இந்த நிகழ்வில் நடிகர் மம்முட்டி கலந்துகொண்டு குழந்தையை ஆசீர்வதித்தார். திலீப்பின் மூத்தமகள் மீனாட்சியும் தற்போது தந்தையுடன் தான் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (4)

  • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

    கனிமொழின்னு பேர் வெச்சிருக்கலாம் கதைக்கு ப் பொருத்தமாயிருந்திருக்குமே

  • Shekar - Mumbai,இந்தியா

    என் வயிறு நிறைந்துவிட்டது, இனி பல வருடங்களுக்கு எனக்கு கவலையில்லை. திலிப் அதிசயத்தை காட்டிவிட்டார், உலக சாதனை படைத்துவிட்டார்

  • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

    இதெல்லாம் ஒரு செய்தியா?

  • Asagh busagh - Munich,ஜெர்மனி

    இன்னும் அதே மொத்த மீசை, டோப்பா ஹேர்ஸ்டைலு. 21ஆம் நூற்றாண்டுக்கு மல்லு நடிங்கனுங்க ஓடோடி வரலைனாலும், ஆமை வேகத்துல நகர்ந்தாவது வரலாமே?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement