Advertisement

ஷோபனாவுக்காக ஒன்றரை வருடம் காத்திருந்த அறிமுக இயக்குனர்

Share

எண்பது, தொன்னூறுகளில் தனது நடிப்பாலும் நாட்டியத்தாலும் தமிழ், மலையாள திரையுலகில் கொடிகட்டி பறந்தவர் நடிகை ஷோபனா. அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக பட வாய்ப்புகளை குறைத்துக் கொண்டு நாட்டியம், நாட்டிய பள்ளி ஆகியவற்றில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் ஆறு வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் ஒரு மலையாள படத்தில் நடித்து வருகிறார் ஷோபனா. இந்த படத்தில் நடிகர் ஷோபனாவுக்கு ஜோடியாக நடிக்கிறார் சுரேஷ் கோபி.

மணிசித்திரதாழ் உள்ளிட்ட பல படங்களில் ஜோடியாக நடித்துள்ள இவர்கள் இருவரும் மிகப்பெரிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இணைந்து நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்ல இந்த படத்தில் கதாநாயகனாக துல்கர் சல்மான் நடிக்கிறார்.. படத்தை பிரபல மலையாள இயக்குனர் சத்யன் அந்திக்காடுவின் மகன் அனூப் சத்யன் இயக்குகிறார். இந்தப்படத்தின் கதையை சொன்னபோது சுரேஷ்கோபி உடனடியாக சம்மதம் சொல்லி விட்டாராம்.

ஆனால் ஷோபனாவிடம் சொன்னபோது உடனே சம்மதம் சொல்லாமல் கிட்டத்தட்ட ஐந்து ஆறு முறை அனூப் சத்யனை வரவழைத்து மீண்டும் மீண்டும் இந்த கதையை கேட்டு, கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு பிறகு இந்தப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தாராம்.. இந்த படத்தை துல்கர் சல்மான் தயாரிக்கிறார் என்று சொல்லியோ, தனது தந்தை சத்யன் அந்திக்காடுவின் பெயரை பயன்படுத்தியோ ஷோபனாவின் சம்மதத்தைப் பெற விரும்பாமல் அவராக சம்மதம் தெரிவிக்கும் வரை காத்திருந்தாராம் அனூப் சத்யன்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement