Advertisement

மகனுக்கு எனது ரசிகர்களை கொடுக்கிறேன்: விக்ரம் உருக்கம்

விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிக்கும் ‛ஆதித்ய வர்மா' படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் மகனை அறிமுகப்படுத்தி விக்ரம் பேசியதாவது:

நான் எப்போதுமே டென்ஷனாக இருந்ததில்லை. ‛சேது' படம் வெளிவரும்போது, பிளஸ் 2 ரிசல்ட்டுக்காக காத்திருந்தபோது கூட இவ்வளவு டென்ஷனாக இருந்ததில்லை. ஆனால் இன்று ரொம்ப டென்ஷனாக இருக்கிறது. இதுவொரு கல்யாணம் மாதிரி. என் பொண்ணுக்கு எப்படி கல்யாணம் பண்ணிக் கொடுத்தேனோ, அப்படி என் மகனும் நல்லபடியாக வர வேண்டும் என்ற எண்ணம் தான்.

உனக்கு என்ன வேணுமோ பண்ணு என்று தான் சொன்னேன். ஆனால் இறுதியாக சினிமா தான் என்றவுடன் சந்தோஷமாக இருந்தது. 5 வருடங்கள் கழித்து நடிக்க வைக்கலாம் என நினைத்தேன். அர்ஜுன் ரெட்டி பார்த்தவுடனே பயந்துவிட்டேன். ஏனென்றால் ரொம்ப வலுவான கதாபாத்திரம், துருவ் வயதுக்கு இது சரியா, மெச்சூரிட்டி இருக்குமா என பயந்தேன். அவன் எப்படி நடித்திருக்கிறான் என்று நான் சொல்ல விரும்பவில்லை. ஒரு அப்பாவாக அதை பெருமையா சொல்ற மாதிரி இருக்கும். படம் வரும்போது நீங்களே தெரிஞ்சுக்குவீங்க.

நானும் இந்தப் படத்தில் உதவி இயக்குநர் மாதிரி வேலை பார்த்திருக்கிறேன் அவ்வளவுதான். துருவ்விடம் உன்னுடைய கனவை மட்டும் பார். அது என்ன சொல்லுதோ, அதை மட்டும் பண்ணு என்பேன். அனைத்து அப்பாக்களுக்குமே பசங்களுக்கு ஏதாவது வீடு கொடுக்கணும், பொருள் கொடுக்கணும் என நினைப்பார்கள். ஆனால், நான் துருவிற்கு எனது ரசிகர்களை கொடுத்துள்ளேன். துருவ் நடிகனாக ஆனதற்கு என் குடும்பம் எவ்வளவு மகிழ்ச்சி அடைந்திருக்கிறதோ... அதே மகிழ்ச்சியை எனது ரசிகர்களும் அடைந்திருக்கிறார்கள்.

இவ்வாறு விக்ரம் பேசினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (5)

  • திண்டுக்கல் சரவணன் - ஓசூர்,இந்தியா

    ரசிகர் இருக்கும்வரை சினிமாக்காரனை அசைக்க முடியாது.

  • nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா

    முதலில் நல்ல குடிமகனாக இருப்பதையும் கற்று கொடுங்க சார், இவனின் கடந்தகாலம் திமிர் பிடித்த காலமாக இருந்துள்ளதை மறக்கவேண்டாம், உங்க மகனுக்கு நல்ல ரசிகர்களை கொடுக்க நினைக்கும் நீங்க நல்ல பழக்கவழக்கங்களையும் கற்று கொடுத்திருக்கலாம்

  • Aadhavan, Janani cable, Mannai -

    அர்ஜுன் ரெட்டி ரொம்ப சாதாரணமான குறிப்பா சொல்லப்போனால் அறுவை படம்.. ஆந்திராவில் உள்ள ரசனை குன்றிய ரசிகர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட அந்த படத்தை தமிழ் ரசிகர்கள் இங்கு வரும்போது கழுவி ஊத்தப்போவது உறுதி... இந்த மொக்கை படத்தை பார்த்து எப்படி விக்ரம் impress ஆனாருன்னு புரியல..

  • வால்டர் - Chennai,இந்தியா

    சரக்கு போட்டு வண்டி ஒட்டி விபத்தை ஏற்படுத்திய பயபுள்ளைதானே இது. ஆரம்பமே கோணல். முதலில் ஒழுக்கத்தை கற்று கொடுங்கள். பின்னர் எல்லாவற்றையும் கொடுக்கலாம்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement