Advertisement

'சந்திரமுகி 2' - ரஜினிகாந்த் நடிக்காதது ஏன் ?

பி.வாசு இயக்கத்தில், ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா மற்றும் பலர் நடித்து 2005ல் வெளிவந்த படம் 'சந்திரமுகி'. மிகப் பெரும் வெற்றி பெற்ற இப்படம் சென்னையில் ஒரு தியேட்டரில் 800 நாட்களைக் கடந்து ஓடி சாதனை படைத்தது.

இப்படத்தின் இரண்டாவது பாகத்தில் தற்போது ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளார். முதல் பாகத்தை இயக்கிய பி.வாசு தான் படத்தை இயக்கப் போகிறார். இப்படம் பற்றிய தகவலை நேற்று ராகவா லாரன்ஸ் கொரானோ நிதி கொடுக்கும் சமயத்தில் கூட சேர்த்து சொல்லி இருந்தார்.

ரஜினிகாந்தின் சினிமா வாழ்க்கையில் மிகப் பெரும் வெற்றிப் படமாக அமைந்த படம் 'சந்திரமுகி'. அப்படத்தின் இரண்டாவது பாகத்தில் அவர் நடிக்காமல் போனது ஏன் என அவரது ரசிகர்கள் நேற்று குழம்பிப் போயிருப்பார்கள்.

பி. வாசு சொன்ன இரண்டாம் பாகக் கதை ரஜினிகாந்துக்குப் பிடிக்கவில்லையாம். எனவேதான் அவர் நடிக்க மறுத்துவிட்டதாகத் தகவல். சீனியர் இயக்குனர்களின் படங்களில் நடிக்காமல் இன்றைய இளம் இயக்குனர்களின் படங்களில் நடித்தால் தான் தற்போதைக்கு சமாளிக்க முடியும் என்பதும் மற்றொரு காரணம் என்கிறார்கள்.

ராகவா லாரன்ஸின் வழக்கமான பேய்க் கதையாகத்தான் 'சந்திரமுகி 2' இருக்கும் என்றும் கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (7)

 • skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா

  VAYASAANAAL PANIOYVU MUKKIYAMUNGKO SANDAIPOTA MUDIYAADHU ADVICEPANNAA EVAALUM RASIKKAVEMAATTAANUKA BCS THEY CANT FOLLOW . POLITICS IS ON ITS WAY TO DISTURB HIM .PEOPLE ARE THINKING THINKING HE LL BE OUR FEATURE CM ,LIKE MGR JAYALALITHA HE LL DO HIS BEST (THINKING MANY DEVOTEES ) IN TAMILNADU GOUNDAMANI SENTHIL VADIVELUKOODA CM AAGALAAME KANDRAAVI NAASMAAPOVUM THAMILNAADU UNMAI

 • premprakash - vellore,இந்தியா

  அப்போ அவரு ஆன்மிகம் பேசக்கூடாது....வாழ்க்கைக்கு பணம்தான் முக்கியம்னு மக்கள் கிட்ட சொல்லணும்.

  • kumar - chennai,இந்தியா

   இது என்னடா இது காமெடியா இருக்கு வாழ்க்கைக்கு பணம்தான முக்கியும், நீ எனக்கு சம்பளம் வேணாம்னு வேலைக்கு போ தம்பி

 • முடியட்டும் விடியட்டும் :: தமிழன் - செந்தமிழ்நாடு ,இந்தியா

  ஏற்கனவே தர்பார் நட்டுக்கிச்சி இனி இறங்கு முகம் தான் இனி அப்பா வேடம் தான் லாயக்கு

  • Vijay - Bangalore,இந்தியா

   சுடலையை பதினாறு வயதினிலே 2வில் நடிக்க கூப்டுவாங்கனு கனவு காணாதே

 • Kd -

  Recent aa வந்த படம் எல்லாம் young directors thhan.. அந்த result எல்லாம் paathutu தலைவர் என் வழி தனி வழி nu இமய மலை ku ட்ரைன் டிக்கெட் வாங்க queue la நின்னுட்டு இருப்பார். Oru தடவை சொன்னா 100 தடவ சொன்ன மாதுரி சொன்ன aaluku than ஒரு ஆளு mela yae நம்பிக்கை pochu.. Rest எடுங்கள் boss.. இல்லைனா amitab aa follow பண்ணுங்க boss. மிச்சம் மீதி இருக்கிற சூப்பர் ஸ்டார் la ஏதாவது மிஞ்சும்

  • Mirthika Sathiamoorthi - Sembawang

   அமிதாபை fallow பண்ணனும்?…ஹஹஹஹ காமெடி பிஸுங்க நீங்க...எங்க தாத்தா ரிடைர்ட் ஆயி வீட்டுல உக்காந்திருக்காரு அதுமாதிரி 60 வயசுக்கு மேலான நீ ஏன் ரிடைர்ட் ஆக கூடாதுன்னு அம்பானியை பாத்து கேக்குறோம்... உங்க தாத்தாவும் அம்பானியும் ஒண்ணா பாஸ்? அமிதாப் ஹீரோவா நடிச்ச அதனைப்படங்களும் படு பிளாப்பாயி வேற வழி இல்லாமல் தாத்தாவானவரும் ( ரிடைர்ட் ஆனா குமாஸ்தாவும்) இன்னும் 100 கோடி சம்பளம் கொடுக்க தயாரிப்பாளர்கள் தயாரா இருக்க ரஜினியும் ஒன்னு? ...ஏன் ரஜினிகாந்த் 100 கோடி சம்பளம் ? அமிதாப் மாதிரி 30 கோடி வாங்கணும் சொல்லவேண்டியதுதானே ? அமிதாப் மாதிரி நடிக்க 1 கோடி ரெண்டு கோடி வாங்கும் சத்யராஜ் ராஜ்கிரண் இருக்காங்கல்ல? ஒஹ்ஹஹ் இவங்களை மாதிரி ரஜினியையும் நடிங்கன்னு சொல்றீங்க….கனா படத்தில் சத்யராஜுக்கு பதிலா ரஜினி 100 கோடி சம்பளம்.? இல்ல 1 கோடி சம்பளம்...100 கோடி சம்பளத்தை ஒரு கோடிக்கு கொண்டுபோக சொல்றீங்க....அதுனாலதான் சொன்னே நீங்க காமெடி பீசு…( கனா படத்தில் ராஜ்கிரணை புக் பண்ணப்பா அவரின் சம்பளம் அதிகம் கொறச்சுக்க சொன்னாங்க.. அவர் சொன்ன பதில் அப்பா வேஷத்தில் நடிக்க 10000 ரூபாய் சம்பளத்தில் ஆளிருப்பாங்க..ஏன் நான்? காரணம் என்னை போட்டா உன் படத்தை நல்ல விலைக்கு உன்னால் விக்க முடியும்.. என்ன போட்டு market பண்ணும்போது என்னோட மதிப்பு எனக்கு தெரியும் அதுதான் இந்த சம்பளம்.) நமக்கு சினிமாவும் தெரியாது அதில் இருக்கும் வியாபார தந்திரமும் தெரியாது ...ரஜினி ஹீரோ இல்லாத குசேலன் படம் மொத்த நஷ்டமும் ரஜினியின் தலையில் ஏன்? அவரை வச்சு மார்க்கெட் பண்ணது..நாளைக்கு ரஜினியின் பட நஷ்டத்துக்கு ரஜினி வீடு வாசலில் நிப்பாங்க உங்க வீடு வாசலில் அல்ல.. தெரியாம கேக்குறேன் .இதுவரை அமிதாப் நடித்த படத்தில் 100 கோடி கிளப்பில் இணைஞ்ச படம் எத்தனைன்னு தெரியுமா? தட்ஸ் ஆப் ஹிந்துஸ்தானி தான் முதல் 100 கோடி படம்….ரஜினியின் 100 கோடி வசூல் படம் எத்தனை? ...இன்றய காலகட்டத்தில் 4 பேர் மட்டுமே ரஜினியின் சம்பளம் கொடுக்க முடியும்...1. சன் 2. கலைப்புலி தாணு 3. லைக்கா 4. AGS ( பீகிள் தயாரிப்பு ) இவர்களே இவர் ஹீரோவா ? அப்படின்னு கேள்வி கேக்கல வந்துட்டாருயா கருத்து கந்தசாமி...அவரு சூப்பர்ஸ்டாரா இருக்காரு இல்ல நாசமா போறாரு அது ரஜினியின் பிரச்னை உனக்கு பிடிச்சா தியேட்டரில் படம் பாரு...இல்லை தமிழ் ராகெர்சில பாரு…வாட்சப்பில வர தகவலை அப்புடியே கருதா போடாதீங்க... சினிமான்னா என்னனு தெரியாத பாப்பா நீயெல்லாம்….அயோ முடியல...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement