Advertisement

குடும்பத்தின் அவசியத்தை உணர்த்திவிட்டது கொரோனா: தாடி பாலாஜி உருக்கம்

சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமான தாடி பாலாஜி, தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அவருக்கும் அவரது மனைவி நித்யாவுக்கு இடையே நீண்ட நாட்களாக பிரச்சினை இருந்து வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பாலாஜியும், நித்யாவும் கலந்துகொண்டனர். அதில் அவர்கள் இருவரும் சமாதானம் அடைந்தது போல காட்டப்பட்டது. ஆனால் நிகழ்ச்சி முடிந்த பின்னர் இருவரும் சேரவில்லை. மகள் போஷிகாவுடன், நித்யா தனியாக வசித்து வருகிறார்.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் வீட்டுக்குள் இருக்கும் பாலாஜியிடம், பிக்பாஸ் வீட்டில் இருந்ததற்கும் இப்போது வீட்டில் இருப்பதற்கும் என்ன வித்தியாசம் என கேட்கப்பட்டது. அதற்கு அவர், பிக்பாஸ் வீட்டில் செல்போன், டிவி என எதுவுமே இல்லை. ஆனால் கூட நிறைய மனிதர்கள் இருந்ததால் பொழுது போனது தெரியவில்லை.

இப்போ டிவி, செல்போன் என எல்லாமே இருக்கிறது. ஆனால் குடும்பம் என ஒன்று இல்லாததால் பொழுதே போக மாட்டேங்குது. இந்த கொரோனா ஊரடங்கு, குடும்பத்தின் அருமையை உணர்த்தி இருக்கிறது என உருக்கமாக கூறியுள்ளார்.

Advertisement
 

வாசகர் கருத்து (6)

  • LAX - Trichy,இந்தியா

    குடும்பத்தின் அவசியத்தையெல்லாம் உனக்கு உணர்தல ராஜா.. ஊரடங்கு விலக்கிக்கொள்ளப்பட்டு, நீங்கள்லாம் கூடி, கூத்தடிக்கற சேனல் கதவு திறந்தவுடனே உன் வேலய காட்ட ஆரம்பிச்சுடுவ.. அதுதான் உண்மை..

  • Girija - Chennai,இந்தியா

    குடிகாரன் பேச்சு கடை திறந்ததும் போச்சு

  • meenakshisundaram - bangalore,இந்தியா

    இவனுக்கு தனக்கு என்னவேணும்னு தெரியவே இல்லை

  • மண்ணாந்தை - Raichur,இந்தியா

    சொல்றதை பார்த்தால் சிக்கிறமே ரெண்டாம் கண்ணாலம் கட்டிப்பார் போல இருக்குது.

  • Bhaskaran - Chennai,இந்தியா

    இவன் ஒரு குடிகாரன் மனைவி குழந்தையுடன் வாழ அறுகதையில்லாதவன்

    • Sanny - sydney,ஆஸ்திரேலியா

      ஆமா, இவரு மட்டும் தான் இந்தியாவுல குடிகாரனா? மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம், நான் சொல்லவில்லை யாரோ பாடிவிட்டு போய்விட்டாங்க.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement