Advertisement

தொழிலாளர்களுக்கு இன்சூரன்ஸ்: சேனல்களுக்கு பெப்சி கோரிக்கை

Share

தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத் தலைவர் ஆர்.கே.செல்வமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். பெப்சி தொழிலாளர்கள் எந்த சேனலுக்கு பணியாற்றுகிறார்களோ அந்த சேனல் அவர்களுக்கு இன்சூரன்ஸ் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என்றார்.

அவர் மேலும் கூறியதாவது: 60 பேருடன் சின்னத்திரை படப்பிடிப்பை நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது. என்றாலும் இப்போது படப்பிடிப்பு தொடங்கவில்லை. காரணம் வெளியூரில் இருக்கும் நடிகர், நடிகைகள் வரவேண்டும். அவர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்ய வேண்டும். படப்பிடிப்புகள் எங்கு நடக்கிறது, எத்தனை பேர் கலந்து கொள்கிறார்கள். என்ன சீரியல், எந்த சேனலுக்கு என்கிற விபரத்தை அதற்கான விண்ணப்பத்தில் பூர்த்தி செய்து சம்பந்தபட்டவர்களின் ஆதார் கார்ட் நகலுடன் சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம் அரசுக்கு வழங்க வேண்டும்.

பணியாற்றும் தொழிலாளர்களுக்கு சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி நிறுவனங்கள் இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். இதனை சேனல்கள் ஏற்றுக் கொண்டிருக்கின்றன, தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு உபரணங்களை தயாரிப்பாளர்கள் வழங்க வேண்டும்.

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட 18 ஆயிரம் தொழிலாளர்களுக்கு, இதுவரை 4 முறை, உதவி செய்துள்ளோம். இப்போது ஊரடங்கு மேலும் ஒரு மாதம் நீடடிக்கப்பட்டிருப்பதால் மீண்டும் 1500 ரூபாய் மதிப்புள்ள பொருட்கள், வழங்க ஏற்பாடு செய்துள்ளோம். என்றார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement