Advertisement

மகனை நடிகனாக்க முயன்ற வடிவேலு: சிங்கமுத்து வெளியிட்ட தகவல்

Share

மனோபாலா நடத்தி வரும் யு டியூப் சேனலில் சிங்கமுத்து தன்னை பற்றி அவதூறாக பேசியதாக வடிவேலு தென்னிந்திய நடிகர் சங்க சிறப்பு அதிகாரிக்கு புகார் மனு அளித்திருந்தார். இந்த விஷயத்தை வடிவேலு அப்படியே விட்டிருந்தால் அமுங்கி போயிருக்கும். இப்போது வடிவேலுவின் புகாரின் காரணமாக வடிவேலு பற்றி சிங்கமுத்து அப்படி என்னதான் பேசியிருக்கிறார் என்று நெட்டிசன்கள் தேட ஆரம்பித்து விட்டார்கள்.

வடிவேலு பற்றி சிங்கமுத்து பேசியது இதுதான்: என் வாழ்க்கை கதையை பங்காளி வடிவேலு இல்லாமல் எழுத முடியாது. அந்த அளவிற்கு நானும் அவரும் உயிருக்கு உயிரான நண்பர்களாக இருந்தோம். இப்போதும் நான் வடிவேலுவை வெறுக்கவில்லை. அவருடன் நடிக்க தயாராகவே இருக்கிறேன்.

நான் சந்தானத்துடன் இணைந்து நடித்ததில் இருந்துதான் பிரச்சினை ஆரம்பமானது. சந்தானத்துடன் இணைந்து நான் நடித்தது அவருக்கு பிடிக்கவில்லை. என்னுடைய மகனை ஹீரோவா நடிக்க வைத்தேன். வடிவேலுக்கு அவருடைய மகனை ஹீரோவாக நடிக்க வைக்கணும்னு ஆசை. ஆனா அவனுக்கு யாரும் வாய்ப்பு கொடுக்கவில்லை. அவர் மகனை ஹீரோவாக்க முடியவில்லை என்றால் அதற்கு என் மகன் ஏன் ஹீரோவாகக் கூடாது, என்னுடைய பையன் பெரிய ஹீரோவாகிடுவானோன்னு நினைச்சுட்டார். அது அவருக்கு பெரிய சங்கடமாகிவிட்டது.

நான் வடிவேலுவை குறை சொல்ல விரும்பவில்லை. இப்போ கூட அவர் அறியாமையில் செய்துவிட்டதாகத் தான் நினைக்கிறேன். வடிவேலு நல்ல நடிகர், நல்ல திறமைசாலி. கேட்பார் பேச்சை கேட்பார். அதுதான் இந்த நிலைக்கு காரணம்.

8 லட்சத்துக்கு நான் வாங்கிக் கொடுத்த இடத்தை 22 கோடிக்கு விற்றுவிட்டார். அவர் தர வேண்டிய 40 லட்ச ரூபாய் கமிஷன் பணத்தை கேட்பேன் என்று நினைத்து என் மீது வழக்கு தொடர்ந்தாரா என்று எனக்கு தெரியாது. அவருடைய பணத்தை நான் ஏமாற்றிவிட்டதாக தொடரப்பட்ட அந்த வழக்கு முடிவதற்கு இன்னும் பத்து ஆண்டுகள் கூட ஆகலாம். உண்மையாகவே அருமையான நடிகனை இழந்துட்டோம். என்று நடிகர் சிங்கமுத்து கூறியிருந்தார்.

மனோபாலா மன்னிப்பு
இதற்கிடையில் இதுகுறித்து மனோபாலா கூறியிருப்பதாவது: வடிவேலு பற்றி சிங்கமுத்து பல இடங்களில் பேசியதைத்தான் என் பேட்டியிலும் பேசினார். அவரது மன உளைச்சலுக்கு நான் காரணமாகி இருந்தால் அதற்காக வருத்தப்படுகிறேன். சினிமாவே ஒதுக்கி விட்ட வடிவேலுக்கு சினிமாவில் ஒரே நண்பன் நான்தான். அவர் மீண்டும் நடிக்க வரவேண்டும் என்று நினைக்கிற ஆத்மார்த்தமான நண்பன் நான். இதை அவரிடமே நான் பலமுறை நேரில் சொல்லியிருக்கிறேன். எந்த காரணத்திற்காகவும் வடிவேலுவின் நட்பை இழக்க மாட்டேன். என்கிறார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (15)

 • GURU THENI - KALLAKURUCHI,அயர்லாந்து

  சிங்கமுத்து உன் தலை கனத்தை மறைக்க தானே விக் உனக்கு சரியான கிரிமினல் மூளை ஏமாற்றியதும் இல்லாமல் கொஞ்சம் கூட கூச்சமே கிடையாதா .திருமறையை கேவலப்படுத்தாதே

 • S. Narayanan - Chennai,இந்தியா

  திறமையானவர்களை யாராலும் தடுக்க முடியாது. வடிவேலு சினிமாவில் ஒரு சகாப்தம். எமது வாழ்த்துக்கள்.

 • skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா

  வடிவேலு தன்பிள்ளைக்கு சீனிச்சான்ஸ் கேட்டால் எண் எரியுறீங்க. கேவலமாயில்லையா சிவாஜி பிள்ளை என் தி ஆர் பிள்ளைகள் எல்லோரும் நடிக்கும்போது திறமை இருந்தால் எவனுக்கும் சான்ஸ் கிடைக்குமெய்யா என்னாத்துக்குவாயாறு எரியுறீங்க வடிவேலு தன்னை எப்போதும் சிம்பிளாவே தான் காட்டிண்டுருக்காரு தன்பொண்ணுப்பிள்ளைகள் திருமணங்களைக்கூட மொய்ப்பணம்க்கு ஆசைப்பட்டு க்ராண்டா செழிப்பா கொண்டாடவேயில்லிங்களே அவரின் மைனஸ் பாயிண்ட் குடி மட்டும்தான் என்று சொல்லுறாங்க சினிமாலே லைட்பாயாய் லெந்து ப்ரட்யூசர்வரை தண்ணீர்கேசுங்களேதான் இன்னிக்கு இல்லிங்க சினிஉலகம் கே சாபம் தான் இந்தக்குடி அண்ட் குட்டி விஷயம் யாருக்கு தெரியும்

 • s.rajagopalan - chennai ,இந்தியா

  ஒழுக்கத்திற்கு சமூகத்தில் இப்போது இடமில்லை. திரை துறையில் எப்போதுமே இது இருந்ததில்லை. இனியும் இருக்காது. உல்லாச துறை அது ...கருப்பு பணம் இல்லாவிட்டால் அந்த துறை நலிந்து விடும் .வருமான வரி பற்றி எல்லாம் அங்கு பேசப்படாது ..... நமக்கு வேண்டியது வடிவேலுவின் நகைச்சுவை மட்டுமே அது இனி வருமா ?

 • jayanantham - tamilnaadu ,இந்தியா

  அடுத்தவர்கள் வயிற்று எரிச்சல் ஆளை உருக்கிவிடும். மனோ பாலா, ஒட்டடைக்குச்சி போல இருக்கும் காரணம் இப்போதுதா ன் தெரிகிறது. அவ்வளவும் கேட்ட எண்ணம்.

 • கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா

  வடிவேலு நிலம் வித்தத்துக்கும், சிங்கமுத்து இதுக்கு முன்னாடி வாங்கியிருக்கிற கமிஷனுக்கும், வரி கட்டி இருக்காங்களா? அதை முதல்லே சொல்லுங்க ..... எல்லாத்துக்கும் முன்னாடி இந்த சினிமாக்காரங்கள்லே யார் யாரு வருமான வரி ஏமாத்தினார்களோ, அவங்களோட வரியை கலெக்ட் பண்ணணும் (அபராதமும் சேர்த்து)

 • M.Sam - coimbatore,இந்தியா

  நடிகர்கள் தங்கள் வாரிசுகளை நடிக்க வைப்பது வாடிக்கையான விஷயம். இது எல்லாம் ஒரு நியூஸ் எதை இந்த சொங்கி சிங்கம் சொல்லுது

 • Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ

  அவன் அப்படி நினைச்சான் இப்படி நினைச்சான்ன்னு வொவ்வொருத்தணும் நினைச்சிட்டிருந்தால் உள்ளுக்குள்ளே புகைஞ்சுகிட்டு சாக வேண்டியது தான்.

 • Siva Kumar - chennai,இந்தியா

  எப்பொழுதுமே தமிழனுக்கு தமிழன் தான் எதிரி. தமிழனுக்கு இன்னொரு தமிழன் நன்றாக இருந்தால் பிடிக்காது. இதற்கு உதாரணங்கள் மெய்ப்பொருள் நாயனார் கதை, எட்டப்பன் வீரபாண்டிய கட்டபொம்மனை காட்டிக்கொடுத்தது.

 • kumzi - trichy,இந்தியா

  செத்துப்போன சினிமாவ நெனச்சு எதுக்கு ஊலயிட்டுட்டு இருக்கீங்க

 • Girija - Chennai,இந்தியா

  சிங்கமுத்து கடன் வாங்கி அரிசி வியாபாரம் செய்து , சினிமாவில் நடித்து , சம்பாதித்து மகனை வைத்து படம் எடுக்க முடியுமா? பேச்சில் துளிகூட நாகரீகம் இல்லை, கரைகண்டவர் போல் அவரிடம் அரிசி கடன் வாங்கிய சினிமா துறையினரை பற்றி நக்கல் பேச்சு, அவருக்கு வியாபாரம் கொடுத்து உதவிய பிராமணர்களை நக்கல் செய்வது , ஒரு தராதரம் இல்லாத மனிதன் என்று தெரிகிறது. நக்கல் செய்யும் மனோ பாலா , நிஜமாகவே ஒரு குப்பை ஆசாமி .

 • karutthu - nainital,இந்தியா

  நண்டு கொழுத்தால் வலையில் தாங்காது என்ற பழமொழி இவர்களுக்கு பொருந்தும் ......இப்போ வர வர தமிழன் கூட ஒருவரை ஒருவர் வாழ விடுவதில்லை

 • NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா

  இப்போ புரியுது மனோபாலா யாரு சைட் டிராக் ஓட்டுனது என்று

 • யார்மனிதன் - Toronto,கனடா

  இந்த மனோபாலா சரியான பச்சோந்தி பய...கொழந்தையையும் கிள்ளி விட்டுட்டு தொட்டிலையும் ஆடுறான்...இவன் சேனல் ஹிட் ஆகணுமுன்னு

 • ashok kumar - coimbatore,இந்தியா

  எனக்கென்னமோ சிங்கமுத்து மேல ஒரு பெரிய சந்தேகம் வருது.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement