Advertisement

ஓடிடி தளத்தில் வெளியாகும் டைட்டானிக்

Share

மெட்ராஸ் படத்தில் அறிமுகமான கலையரசன். அதன் பிறகு டார்லிங் 2, உரு, எய்தவன், அதே கண்கள், ஐரா போன்ற படங்களில் நடித்தார். தற்போது அவர் நடித்து முடித்துள்ள படம் டைட்டானிக். ஜானகிராமன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் கலையரசனுடன் ஆனந்தி, ஆஷ்னா சவேரி, காளி வெங்கட் ஆகியோர் நடித்துள்ளனர், நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். திருகுமாரன் என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் சி.வி.குமார் தயாரித்துள்ளார்.

இந்த படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இது குறித்து தயாரிப்பாளர் சி.வி.குமார், ஓடிடி நிறுவனங்களுடன் பேசி வருகிறார். விரைவில் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. ஏற்கெனவே கலையரசன் நடித்த களவு திரைப்படமும் ஓடிடி தளத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • DUBAI- Sivagangai babu Kalyan - dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    odd mean , which odd ..amazon r any other ..dont inform odd ..just inform name of the odd

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement