Advertisement

வானுார் தீயணைப்பு நிலைய புதிய கட்டடம் திறக்கப்படுமா?

Share
மயிலம் : வானுார் தீயணைப்பு நிலைய புதிய கட்டடத்தை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வானுார் தாலுகாவில் பல ஆண்டுகளாக தீயணைப்பு நிலையம் வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வந்தது. பின்னர் தீயணைப்பு நிலையத்திற்கு புதிய கட்டடம் கட்டப்பட்டு பணிகள் முடிவடைந்துள்ளது. வானுார் ஒன்றியத்தில் ஏராளமான கிராமங்கள் உள்ளது. மேலும் வானுார், திருசிற்றம்பலம் கூட்ரோட்டில் பல தொழிற்சாலைகள் உள்ளது. இந்த பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் நடக்கிறது. எனவே வானுாரில் கட்டப்பட்ட புதிய தீயணைப்பு நிலைய கட்டடத்தை திறக்க வேண்டும் என கிராம பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement