Advertisement

பொதுமக்களின் கோரிக்கைகள்: தொலைபேசி எண்கள் அறிவிப்பு

Share
விழுப்புரம் : பொதுமக்களின் கோரிக்கைகள் தொடர்பான புகார்கள் தெரிவிக்க, அலுவலர்களின் தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது .

கலெக்டர் அண்ணாதுரை செய்திக்குறிப்பு;விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் குறித்த மனுக்களை நேரில் கொண்டுவர சிரமப்படுவதை தவிர்க்க சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு தொலைபேசி வாயிலாக தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, பட்டா மாற்றம் மற்றும் நிலம் தொடர்புடைய கோரிக்கைகளுக்கு கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) 04146 -223264, நிலஅளவை தொடர்புடைய கோரிக்கைகளுக்கு உதவி இயக்குநர் (நில அளவை) 04146 -250599, குடிமைப்பொருள் தொடர்புடைய கோரிக்கைகளுக்கு மாவட்ட வழங்கல் அலுவலர் 04146 -229884, முதியோர் உதவித்தொகை தொடர்புடைய கோரிக்கைகளுக்கு சமுக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் 04146 -221395, ஊரக வளர்ச்சி தொடர்புடைய கோரிக்கைகளுக்கு கலெக்டர் நேர்முக உதவியாளர் (ஊரக வளர்ச்சி) 04146 -222664, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் தொடர்புடைய கோரிக்கைகளுக்கு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் 04146 -222954, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் நலம் தொடர்புடைய கோரிக்கைகள் மாவட்ட பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் 04146 -222011 ஆகிய தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.

பொதுமக்கள் திங்கள் கிழமைகளில் அலுவலக நேரத்தில் தங்கள் கோரிக்கை குறித்தான மேற்கண்ட தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement