Advertisement

விழுப்புரத்தில் கொரோனா பாதிப்பு 4,316 ஆக உயர்வு

Share
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 76 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் பாதிப்பு 4,316 ஆக உயர்ந்துள்ளது.


விழுப்புரம் மாவட்டத்தில் 4,316 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில், 39 பேர் இறந்தனர். கொரோனா தொடர்பாக 803 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லுாரி டாக்டர் ஒருவர், மேற்கு போலீஸ் நிலைய சிறப்பு சப் இன்ஸ்பெக்டர், செஞ்சி மற்றும் கணக்கன்குப்பத்தை சேர்ந்த 9 மாத கர்ப்பிணி பெண்கள், விழுப்புரத்தை சேர்ந்த சி.ஆர்.பி.எப்., போலீஸ் உட்பட நேற்று 76 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் பாதிப்பு 4,316 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கையாக 719 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.


இதுவரை நோயில் இருந்து குணமடைந்த 3,473 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும், கொரோனா பாதிக்கப்பட்டு விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் நேற்று முன்தினம் இறந்த செஞ்சியை சேர்ந்த 60 வயது நபரின் இறப்பு நேற்று அறிவிக்கப்பட்டது. இதனால், மாவட்டத்தில் இறப்பு எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.


கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 75 பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது.சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்கனவே 4,063 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், 200க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்ததில் 75 பேருக்கு நேற்று தொற்று உறுதியானது.இதனால், மாவட்டத்தில் தொற்றால் பாதித்தோரின் எண்ணிக்கை 4,131 ஆக உயர்ந்தது. இதில், 3,274 பேர் குணமடைந்துள்ளனர். 30 பேர் இறந்தனர். மீதமுள்ள 827 பேர் சிகிச்சையில் உள்ளனர்.ஒருவர் பலிசின்னசேலத்தைச் சேர்ந்த 40 வயது பெண், கொரோனா தொற்று உறுதியானதால் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று அவர் இறந்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement