Advertisement

விழுப்புரத்தில் கிருமி நாசினி தெளிப்பு

Share
விழுப்புரம் : விழுப்புரத்தில், சுகாதார துறை அலுவலகத்தில் காட்சிபொருளாக இருந்த கிருமி நாசினி தெளிப்பு 'கிரேப் மாஸ்டர்' வாகனம் தினமலர் செய்தி எதிரொலியால் பயன்பாட்டிற்கு வந்தது.


விழுப்புரம் நகர பகுதிகளில், தினந்தோறும் கொரோனா நோய் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இதை தடுக்கும் பணிகளில் மாவட்ட நிர்வாகத்தோடு இணைந்து சுகாதார துறை, நகராட்சி, காவல் துறை, வருவாய் உள்ளிட்ட துறை அலுவலர்கள் இணைந்துள்ளனர்.விழுப்புரம் சுகாதார துறை அலுவலகத்தில் பல மாதங்களாக கிருமி நாசினி தெளிப்பதற்காக, திராட்சை தோட்டங்களில் பயன்படுத்தப்படும். 'கிரேப் மாஸ்டர்' வாகனம் வாங்கப்பட்டு, வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் பதிவெண் கிடைக்காததால் காட்சி பொருளாகவே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.


இது பற்றி, தினமலரில் செய்தி வெளியாகியது. இதன் எதிரொலியாக, 'கிரேப் மாஸ்டர்' வாகனத்திற்கு பதிவெண் பெறப்பட்டு, தற்போது விழுப்புரம் நகரில் கிழக்கு பாண்டி ரோடு உள்பட பல்வேறு இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement