Advertisement

திண்டிவனம் கூட்டுறவு நகர வங்கி நிர்வாக குழு கூட்டம்

Share
திண்டிவனம் : திண்டிவனம் கூட்டுறவு நகர வங்கியின் நிர்வாக குழு கூட்டம் நேற்று மாலை நடந்தது.


கூட்டத்திற்கு கூட்டுறவு நகர வங்கியின் தலைவர் சேகர் தலைமை தாங்கினார்.கூட்டத்தில் வங்கியின் துணை தலைவர் சக்கரவர்த்தி, மேலாண் இயக்குநர் ரூபன் கென்னடி, இயக்குநர்கள் சேட்டு, திருமகள், அண்ணாதுரை, நரேந்திரகுமார், கற்பகம், பிரகாஷ், வரலட்சுமி, பொது மேலாளர் விஜயகுமார், மேலாளர் செல்வம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், அடமான கோரிய கடன்தாரர்களின் கடன் தொகையை அங்கீகரித்தல், வங்கியில் மகளிர் சுயஉதவி குழு கடன் மனுக்களை பரிசீலித்து கடன் வழங்குதல், சிறு வணிக கடன் ரூ.25 ஆயிரத்திலிருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்துதல் உள்ளிட்ட தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டது. கூட்டத்தில் பதவி உயர்வு பெற்ற அதிகாரிகள் கவுரவிக்கப்பட்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement