Advertisement

போலீசாருக்கு கொரோனா அதிகரிப்புரோல் கால் நடைமுறை நிறுத்தப்படுமா

Share
விழுப்புரம் : போலீசாருக்கு கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், ரோல் கால் (ஆஜர் அணிவகுப்பு) நடைமுறையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும்.


விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால், தினந்தோறும் 50 முதல் நுாறுபேர் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில், கடந்த சில தினங்களாக மாவட்டத்தில் உள்ள போலீசாரும் தினந்தோறும் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர்.இந்நோய் தொற்று போலீசார் மற்றும் அவர்களின் குடும்பத்தினரிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மாவட்டத்தில் உள்ள போலீசார் கொரோனா தடுப்பு சோதனைசாவடிகள், தனிமைப்படுத்தப் பட்டோர் வார்டுகள், கொரோனா சிறப்பு மையங்கள் உள்ளிட்ட இடங்களில் பணிபுரிந்து வருகின்றனர்.


இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் தற்போது ரோல் கால் எனும் ஆஜர் அணிவகுப்பு நடைமுறையில் உள்ளது. இதற்காக போலீசார் தினந்தோறும் காலையில் தங்களின் போலீஸ் நிலையத்தில் ஒன்று கூடுகின்றனர். அங்கு அவர்களின் வருகையை உறுதி செய்து, பணி வழங்கப்படுகின்றது.இங்கு போலீசார் கூட்டமாக நிற்பதால், அவர்களுக்கு கொரோனா பரவும் அபாய நிலை உள்ளது. போலீசாரின் நிலையை கருத்தில் கொண்டு ஏற்கனவே இருந்த எஸ்.பி., ஜெயக்குமார், ரோல் கால் நடைமுறையை கொரோனா தொற்று துவங்கிய தினத்தில் இருந்து தற்காலிகமாக நிறுத்தி வைத்தார்.


இதன், பின் வாட்ஸ் ஆப் குழு மூலம் போலீசாருக்கு பணி வழங்கப்பட்டு வந்தது. தற்போது மீண்டும் துவங்கியுள்ள ரோல் கால் நடைமுறை, போலீசாரிடையே கொரோனா அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.எனவே, போலீசாரின் பாதுகாப்பை உறுதி செய்ய, ரோல் கால் நடைமுறையை, கொரோனா பிரச்னை வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்க எஸ்.பி., ராதாகிருஷ்ணன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement