Advertisement

காதலியின் தந்தையை கொலை செய்த காதலன்

Share
திருநெல்வேலி: தென்காசி மாவட்டம் செங்கோட்டை வடகரைகாலனியை சேர்ந்தவர் நாகராஜ் 54. மகள் சுப்புலட்சுமி 23. இவரும் கடையநல்லுாரை சேர்ந்த முருகராஜ் 27 என்பவரும் காதலித்தனர்.

சுப்புலட்சுமிக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்தார் நாகராஜ். இதனை தடுக்க சுப்புலட்சுமியுடன் இருக்கும் படத்தை முருகராஜ் மாப்பிள்ளை வீட்டாருக்கு அனுப்பி வைத்தார்.இதனால் ஆத்திரமுற்ற நாகராஜ் முருகராஜ் வீட்டிற்கு சென்று கண்டித்தார். அப்போது ஏற்பட்ட தகராறில் அவரை முருகராஜ் உள்ளிட்டோர் கட்டையால் அடித்து கொலை செய்து தப்பினர். கடையநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement