Advertisement

இ- பாஸ் ரத்து தற்போதைக்கு இல்லை: முதல்வர்

Share
திருநெல்வேலி: கொரோனா காலத்திலும், தமிழகம் அதிக முதலீட்டை ஈர்த்துள்ளதாக முதல்வர் இ.பி.எஸ்., தெரிவித்துள்ளார். கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் அனைவரும் பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும். இ-பாஸ் தற்போதைக்கு ரத்து செய்ய வாய்ப்பில்லை எனவும் கூறியுள்ளார்.

நெல்லையில் ரூ.196.75 கோடியில் முடிக்கப்பட்ட திட்டங்களையும், தென்காசி மாவட்டத்திற்கான ரூ.78.77 கோடி மதிப்பிலான திட்டங்களையும் துவக்கி வைத்தார். புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். பின்னர் வீட்டு மனை பட்டா, அம்மா இரு சக்கர வாகனம், வேளாண்மை இயந்திரங்கள் என அனைத்து துறைகளின் சார்பில், 5, 982 பயனாளிகளுக்கு, ரூ.36 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தொடர்ந்து முதல்வர், கொரோனா ஊரடங்கால், தொழிலாளர்கள் பாதிக்கப்படாத வகையில், அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தாமிரபரணி, -கருமேனியாறு இணபை்பு திட்டத்தின் தாமதத்திற்கு நிலம் கையகபடுத்தும் பணியே காரணம். ரூ.1000 கோடியில் பல்வேறு பகுதிகளில் தடுப்பணைகள் கட்டப்படுகிறது. கொரோனா தடுப்பு பணிகளில் தமிழக அரசு முனைப்பு காட்டி வருவதாகவும், கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும் எனக்கூறினார்.

பின்னர், முதல்வர் இ.பி.எஸ்., நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா நோய் தடுப்பு பணிகளை ஆய்வு செய்தார்.

அப்போது இ.பி.எஸ்., கூறுகையில், கொரோனா காலத்திலும் 41 புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் அதிக முதலீட்டை ஈர்த்த மாநிலமாக தமிழகம் உள்ளது. வேகமாக இ-பாஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முறையாக அத்தியாவசிய தேவைக்கு செல்வோருக்கு இ - பாஸ் வழங்கப்படும். அதில் மாற்றமில்லை. வெளிமாநில தொழிலாளர்களை அழைத்து வருவதற்கு உடனடியாக இ-பாஸ் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதன் பின்னர், நிருபர்களை சந்தித்த இ.பி.எஸ்., கூறியதாவது: விவசாயகள், தொழில்முனைவோர் வைத்த கோரிக்கைகளை அரசு பரிசீலனை செய்யும். கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பிளாஸ்மா வங்கி துவங்கப்பட்டு, பிளாஸ்மா தானம் பெறப்பட்டு, தீவிரமாக பாதிக்கப்பட்ட ஒருவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா பாதித்தவர்கள் சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடு திரும்பிய பின்னர் பிளாஸ்மா தானம் செய்ய முன் வர வேண்டும். அதன் மூலம் பலரை காப்பாற்ற முடியும்.திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரியில் 100 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் திசையன்விளை தாலுகா உருவாக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியில் ஆயிரம் கோடி ரூபாயில் ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் நடந்து வருகின்றன. யாரை அரியணையில் ஏற்ற வேண்டும் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். இ-பாஸ்முறையை தற்போதைக்கு ரத்து செய்ய வாய்ப்பு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (24)

 • Shake-sphere - India,இந்தியா

  கடந்த ஆட்சியில் மின்சாரத்தின் மூலம் ஷாக் கொடுத்தார்கள், தற்போதய E-PASS ( Edappadi Pass ) மூலம் அவுட் பாஸ் கொடுக்க போகிறார்கள்

 • அறவோன் - Chennai,இந்தியா

  Target ட்டை achieve பண்ணனும், இல்லையா பின்னே ‼️‼️‼️

 • SAPERE AUDE -

  தமிழக முதல்வர் "ஈ-பாஸ்" வழங்குவதை மறு பரிசீலனை செய்து உடனே கைவிடவேண்டும். அல்லது இதன் வழங்கும் முறையை எளிமையாக்க வேண்டும்.

 • JVM -

  Bcoz of Epass issues ADMK is going to loose the general public votes.By the time they realise it will be too late.....

 • Krismoo - Vellore,இந்தியா

  உங்களுக்கு அடுத்த தேர்தலிலே ஆப்பு வைக்க மக்கள் ரெடியாயிட்டாங்க. பிஜேபி கு மக்கள் வாக்களிக்க தயாராயிட்டாங்க. மக்களின் மனநிலையை கொள்ளும் திறமை வேண்டும் முதலமைச்சரா இருப்பதற்கு. இ பாஸ் ரத்து செய்ய துணிவு வேண்டும். கொரோனா ஒழியப்போறதும் இல்லை . நீங்கள் ரத்து செய்யபோகிறதும் இல்லை . பிஜேபி ஆட்சி மலரட்டும். திராவிட கட்சி ஆட்சி ஒழியட்டும் .

  • Gopinathan S - chennai,இந்தியா

   உங்களுக்கு அடுத்த தேர்தலிலே ஆப்பு வைக்க மக்கள் ரெடியாயிட்டாங்க..........இதுவரைக்கும் சரி....அதென்ன பிஜேபி கு மக்கள் வாக்களிக்க தயாராயிட்டாங்க????

  • பிம்பிலிக்கி பிளாப்பி - டோலக்பூர் ,இந்தியா

   உண்மை தான் தம்பி மக்கள் இரண்டு கழகங்கள் செய்யும் அழிச்சாட்டியங்களை கண்டு மனம் வெதும்பு இருப்பது பி ஜெ பி க்கு வாக்களிக்க தயாராபைவிட்டனர் தான்

Advertisement