Advertisement

கோவில்பட்டி அருகே விரைவில் ராணுவ விமானபடை தளம் : - அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ தகவல்

Share
தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே விரைவில் ராணுவ விமானபடை தளம் அமைய வாய்ப்பு உள்ளதாகவும், திரையரங்குகளை திறக்க தற்சமயம் சாத்தியக்கூறுகள் இல்லை என்றும் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.ராஜூ தெரிவித்துள்ளார்.


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், கோவில்பட்டி அருகே கயத்தார் விமானநிலையம் தரமான விமான நிலையம், அதன் ஓடு தளம் இன்றும் தரமாக உள்ளது.2ம் உலகப்போரின் போது அமைக்கப்பட்ட அந்த விமான நிலையத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்திய ராணுவத்தில் உள்ள விமான படைக்கு ஒப்படைப்பதற்காக கையகப்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.விரைவில் விமான படைபிரிவு விமான தளம் அமைக்க சாத்தியக்கூறு உள்ளது.

மின் கட்டணம் தொடர்பாக தமிழக அரசு ஏற்கனவே விளக்கம் கொடுத்துள்ளது. ஆனால் திமுக அரசியலுக்காக கருப்புக் கொடி போராட்டம் நடத்த உள்ளது.

திரையரங்குகளை திறக்க தற்சமயம் சாத்தியக்கூறுகள் இல்லை.வெளிநாடுகளில் திரையரங்குளில் ஒரு வரிசையில் இருவர் மட்டும் அமர்ந்து படம் பார்க்கின்றனர். அதை இங்கு நடைமுறைப்படுத்தினால் திரையரங்கு உரிமையாளர்களுக்கு லாபம் கிடைக்காது. நஷ்டத்துடன் இயக்க வேண்டிய சூழ்நிலை வரும். திரைப்படத்துறையினருக்கு தேவையான உதவிகளை தமிழக அரசு செய்து வருகிறது. நாட்டில் உள்ள நிலைமையை பொறுத்து திரையரங்குகளை திறப்பது பற்றி முதல்வர் முடிவு எடுப்பார். இவ்வாறு அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Bhaskaran - Chennai,இந்தியா

    தியேட்டர்காரன் இவ்வளவு காலம் அநியாயமாக சம்பாதிச்சது போதும்

Advertisement