Advertisement

ஊரடங்கினை மீறி இறைச்சி விற்பனை செய்த 4 கடைகளுக்கு சீல்

Share
திருநெல்வேலி : தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக கடந்த 4 வாரங்களாக தளர்வு இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியிலும் ஊரடங்கு காரணமாக அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்த நிலையில், இறைச்சி விற்பனை நடைபெறுவதாக கோவில்பட்டி தாசில்தார் மணிகண்டனுக்கு தகவல் கிடைத்தது.
இதையெடுத்து மணிகண்டன் சோதனை மேற்கொண்டார். வேலாயுதபுரத்தில் உள்ள ஆட்டு இறைச்சி கடையில் விற்பனை நடைபெறுவதை கண்டறிந்து, அந்த கடைக்கு சீல் வைத்தது மட்டுமின்றி, அங்க இருந்த உரிமையாளர், பணியில் இருந்த 4 ஊழியர்கள் என 5 பேரையும் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தார். மேலும் அவர்கள் இறைச்சி வெட்ட பயன்படுத்திய அரிவாள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தார்.
தொடர்ந்து பார்க் சாலையில் சோதனை நடத்தினார். அப்போது அங்குள்ள 3 கடைகளில் உள்பக்கமாக கடையை பூட்டி கொண்டு ஆடு,கோழி மற்றும் மீன் உள்ளிட்ட இறைச்சிகள் வெட்டப்படுவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையெடுத்து 3 கடைகளுக்கும் சீல் வைத்து, கடையின் உரிமையாளர்கள் 3 பேரையும் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

கடையினை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு,செல்போன் மூலமாக வாடிக்கையாளர்களிடம் இறைச்சி ஆர்டர் எடுத்து, அவர்களுக்கு தேவைக்கு ஏற்ப இறைச்சியை வெட்டி கொடுத்து விற்பனை செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement