Advertisement

ஒப்பந்ததாரர்கள் குடிசைவாசிகள் அவதி

Share
திருநெல்வேலி: தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட தபால் தந்தி காலனி பகுதியில் உள்ள பக்கிள் ஓடையின் இருபுறமும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் சாலை விரிவாக்கம் , மழை நீர் தேங்காதவண்ணம் கழிவு நீரோடைகள் அமைக்கப்பட்டு பக்கிள் ஓடையை சென்றடையும் வகையில் பணிகள் தற்போது நடைப்பெற்று வருகிறது.

இந்நிலையில் பக்கிள் ஓடை பகுதியில் சுமார் 15 க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை மாநகராட்சி பணிகளை மேற்கொண்டு வரும் ஒப்பந்தகாரர்கள் எவ்வித முன்னறிவிப்புமின்றி வீடுகளை காலி செய்யவும், சில வீடுகளை அகற்றியும் உள்ளனர். கொரோனா காலத்தில் போதிய வருமானமின்றி உள்ள சூழலில் தற்போது அகற்றப்படும் குடிசை வீடுகளில் வசித்து வருபவர்கள் நிர்கதியாக உள்ளனர்.


இப்பகுதியில் வசித்து வருபவர்கள் கூலி வேலை மற்றும் வீட்டு வேலைகளை செய்து வருகின்றனர். தற்போது வீட்டு வேலைகளுக்கு கூட கொரோனா தொற்றால் செல்ல இயலாத நிலையில் போதிய வருமானம் தவிக்கும் இவர்களுக்கு வீடுகளை காலி செய்ய மாநகராட்சி அழுத்தம் கொடுத்து வருவது மிகுந்த வேதனையை அளிக்கின்றது என்கின்றனர்

.இது குறித்து அப்பகுதியை சேர்ந்த வயதான மூதாட்டி சாவித்திரி கூறுகையில், கணவன், பிள்ளைகள் இல்லாமல் இப்பகுதியில் வசித்து வரும் இவர் அப்பகுதியில் கம்பங்கூழ் சாலையோர கடை அமைத்து வருவதாகவும் தனது வீட்டை அகற்றி மண்ணை கொட்டி வைத்துள்ளதாக கூறும் இவர் வீட்டில் உள்ள பொருட்கள் வீதியில் கிடப்பதாக கூறுகிறார்.


இதே பகுதியை சேர்ந்த கலா என்பவர் கூறுகையில், இப்பகுதியில் 20 வருடகாலமாக குடியிருந்து வருவதாகவும், திடீரென காலி செய்ய சொல்வதால் என்ன செய்வதென்று தெரியவில்லை என கூறும் இவர், தங்களுக்கு மாற்று இடம் தரவேண்டும் என்கிறார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement