Advertisement

மாயமான குழந்தைகளை 1 மணி நேரத்தில் கண்டுபிடித்த போலீசுக்கு பாராட்டு

Share
திருநெல்வேலி: தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு போலீஸ் ஸ்டேசன் எல்லைக்குட்பட்ட பகுதியில் காணாமல் போன 3 குழந்தைகளை ஒரு மணி நேரத்தில் கண்டு பிடித்த போலீசாரை மாவட்ட எஸ்.பி., ஜெயக்குமார் பாராட்டியதுடன்ல குழந்தைகளை அவர்களது தாத்தா, பாட்டியிடம் ஒப்படைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அருகேயுள்ள நாணல்காட்டான்குளத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மற்றும் சத்யா ஆகியோரின் பேத்தி சத்யஜோதி (12), பேரன்கள் ஹரி சிவகணேஷ் (11) மற்றும் ஸ்ரீதர் (10) ஆகிய மூன்று குழந்தைகளும் நேற்று (31.07.2020) மதியம் 2 மணியளவில் வீட்டிலிருந்து வெளியே சென்றவர்கள் மாலை 5 மணி ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது தாத்தா மற்றும் பாட்டி மாலை 6 மணிக்கு முறப்பநாடு போலீஸ் ஸ்டேசனில், இன்ஸ்பெக்டர் பார்த்திபன் அவர்களிடம் புகார் அளித்தனர்.



உடனடியாக முறப்பநாடு போலீசார் அருகில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் சென்று விசாரணையில் ஈடுபட்டனர். இந்த விசாரணையில் குழந்தைகள் வட வல்லநாடு காட்டுப்பகுதியில் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு சென்று குழந்தைகளை போலீசார் மீட்டனர்.



குழந்தைகளை விசாரித்ததில், அவர்கள் தங்களது தாய், தந்தையர் குடும்பச் சண்டை காரணமாக வீட்டை விட்டுச் சென்று விட்டனர். தங்கள் தாத்தா, பாட்டியுடன் வசித்து வருகிறோம். பெற்றோர்கள் இல்லாத மன வருத்தத்தில் வீட்டிலிருந்து வெளியேறி எங்காவது செல்வது என்று முடிவெடுத்து சென்றோம் என, அவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.



இதனையடுத்து தூத்துக்குடி எஸ்.பி., ஜெயக்குமார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தைகளுக்கு அறிவுரைகள் வழங்கி உணவும் வாங்கிக் கொடுத்து, தாத்தா, பாட்டியிடம் ஒப்படைத்தார்.

புகார் வந்த ஒரு மணி நேரத்தில் துரிதமாக செயல்பட்டு குழந்தைகளை மீட்ட முறப்பநாடு இன்ஸ்பெக்டர் பார்த்திபன், எஸ்.ஐ., சுரேஷ்குமார், ராஜா ராபர்ட், தலைமைக் காவலர் ரவி, போலீசார் கோகுல கிருஷ்ணன் மற்றும் பெரும்படையான் ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement