Advertisement

குண்டர் சட்டத்தில் இரண்டு பேர் கைது

Share
திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே, சாராயம் விற்ற பெண் உள்பட இரண்டு பேரை குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே, நேதாஜி நகரை சேர்ந்தவர்கள் சீனிவாசன், 45, உஷா, 35. சாராயம் விற்று வந்த அவர்களை, வாணியம்பாடி போலீசார் கடந்த மாதம், 2ல் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர். அவர்கள் மீது தலா, 25க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதால், குண்டர் சட்டத்தில் கைது செய்ய, மாவட்ட கலெக்டர் சிவன் அருளுக்கு, எஸ்.பி., விஜயகுமார் பரிந்துரை செய்தார். இதையடுத்து, அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். போலீசார் அதற்கான நகலை, சிறையில் உள்ள அவர்களிடம் நேற்று வழங்கினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement