Advertisement

12 அடி நீள மலைப்பாம்பு வனத்துறையிடம் ஒப்படைப்பு

Share
திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே, 12 அடி நீள மலைப்பாம்பை, மக்கள் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர். திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த அரங்கல்துருகம் அருகே, காரப்பட்டு புதுமனையை சேர்ந்தவர் ரகோத்தமன், 55, விவசாயி. இவர் நிலத்தில் நிலக்கடலை பயிரிட்டுள்ளார். அதற்கு தண்ணீர் பாய்ச்ச நேற்று காலை, 8:00 மணிக்கு சென்றார். அப்போது, 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று இருந்தது. அதை பார்த்த அவர், அங்கிருந்தவர்களுக்கு தகவல் தெரிவித்தார். அப்பகுதியை சேர்ந்த, 10 பேர் நான்கு மணி நேரம் போராடி மலைப்பாம்பை லாவகமாக பிடித்து, ஆம்பூர் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். பின்னர் அந்த பாம்பு, அரங்கல்துருகம் காப்புக்காட்டில் வனத்துறையினரால் விடப்பட்டது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement