Advertisement

தந்தையை உருட்டு கட்டையால் அடித்து கொன்ற மகன் கைது

Share
திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே, தந்தையை அடித்து கொலை செய்த, மகனை போலீசார் கைது செய்தனர். திருப்பத்தூர் அடுத்த, பேராம்பட்டை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 74. தமிழக உயர் கல்வித்துறையில், சென்னையில் இயக்குனராக இருந்து ஓய்வு பெற்றவர். மனைவி ராஜேஸ்வரி, 10 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். அதில், இருவர் அமெரிக்காவில் வசிக்கின்றனர். கடைசி மகன் சேதுராமன், 45, பக்கத்து தெருவில் மனைவி, குழந்தையுடன் வசிக்கிறார். இதனால், பாலகிருஷ்ணன் தனியாக வசித்து வந்தார். பாலகிருஷ்ணனுக்கு திருப்பத்தூர், வேலூர், சென்னை, தர்மபுரி, சேலம், பெங்களூரு ஆகிய இடங்களில், 42 வீடுகள், ஓசூரில் ஒரு வணிக வளாகம், திருப்பத்தூரில், 120 ஏக்கர் நிலம் ஆகியவை உள்ளன. இது தவிர, பல கோடி ரூபாய் மதிப்பிலான சேமிப்பு பத்திரங்கள் மற்றும் நகை, ரொக்கப்பணம் வைத்திருக்கிறார். நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு தந்தைக்கு உணவு எடுத்துச் சென்ற சேதுராமன், சிறிது நேரத்தில் பாலகிருஷ்ணனை யாரோ கொலை செய்து விட்டதாக, அழுது கொண்டே அக்கம் பக்கத்தினரிடம் கூறியுள்ளார். திருப்பத்தூர் தாலுகா போலீசார் உடலை கைப்பற்றினர். தந்தையை கொலை செய்தவர்களை கைது செய்யக்கோரி, சேதுராமன் போலீசில் புகாரளித்தார். பாலகிருஷ்ணன் வீட்டுக்கு வெளியே கதவு பூட்டப்பட்டிருந்ததால், சாவியை வைத்திருந்த சேதுராமன் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால், சேதுராமனிடம் போலீசார் விசாரித்தனர். அதில், நேற்று முன்தினம் மாலை, பாலகிருஷ்ணன் வீட்டுக்கு சென்ற சேதுராமன் மருந்து கடை வைக்க, 20 லட்சம் ரூபாய் கேட்டு தகராறு செய்துள்ளார். பணம் தர மறுத்ததால், உருட்டு கட்டையால் தந்தையை அடித்து கொலை செய்தார். சந்தேகம் வராமலிருக்க, வீடு முழுவதும் மிளகாய் பொடியை தூவினார். பின்னர் வெளியே வந்து, தந்தையை யாரோ கொலை செய்து விட்டார்கள் என, கூச்சலிட்டு நாடகமாடியது தெரியவந்தது. போலீசார் சேதுராமனை நேற்று கைது செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement