Advertisement

பப்ஜி கேம் விளையாடிய மாணவர் தற்கொலை: எச்சரிக்கை விடுத்த கல்வித்துறை அதிகாரிகள்

Share
திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே, ஓமக்குப்பம் கொல்லக்கொட் டாயை சேர்ந்தவர், திருமூர்த்தி, 56; விவசாய கூலித்தொழிலாளி; இவரது, மகன் தினேஷ்குமார், 15; இவர், மிட்டூர் அரசு பள்ளியில், 9ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார். அதே பகுதியை சேர்ந்த, 20க்கும் மேற்பட்ட மாணவர்களுடன், அங்குள்ள மரத்தடியில், மற்றவர்களின் மொபைல் போனில், 'பப்ஜி கேம்' விளையாடி வந்தார். தனக்கென்று தனியாக மொபைல்போன் வாங்கித்தர, தந்தை திருமூர்த்தியிடம் கேட்டுள்ளார். நேற்று முன்தினம் காலை, 9:00 மணிக்கு, பள்ளிக்கு சென்ற தினேஷ்குமார், 10ம் வகுப்பு இலவச பாட புத்தகங்களை வாங்கி வந்துள்ளார். வழியில் இருந்த மாணவர்களிடம், 'பப்ஜி கேம்' விளையாட அவர் களது மொபைல்போனை கேட்டுள்ளார். அவர்கள் தர மறுத்ததால், ஏக்கத்துடன் வீடு சென்றார். பின், நடந்ததை நோட்டு புத்தகத்தில் எழுதி வைத்து விட்டு, தாயின் சேலையில், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து, குரிசிலாப்பட்டு போலீசார் விசாரிக்கின்றனர். கல்வித்துறை அதிகாரிகள், மாணவர் படித்த பள்ளியில் ஒன் பது, 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களிடம் நேற்று விசாரித்தனர். இதில் பலர், 'பப்ஜி கேம்' விளையாடியது தெரிந்தது. இதன் தீமையை கூறி, விளையாட வேண்டாம் என்று அறிவுரை வழங்கிய அதிகாரிகள், அவர்களின் மொபைலில் இருந்த, 'பப்ஜி கேம் ஆப்'பை அழித்து, ?அவர்களின் பெற்றோரை எச்சரித்து அனுப்பினர். கொரோனா ஊரடங்கால், வீட்டில் முடங்கிக் கிடக்கும் மாணவர்கள் இந்த கேமை விளையாடி, மனநிலை பாதித்துள்ளனர். இந்த கேமிற்கு, குஜராத்தில் தடை உள்ள நிலையில், தமிழகத்திலும், தடை விதிக்க, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement