Advertisement

கைதியின் காதல் வலையில் சிக்கிய பெண் டாக்டர்!

கைதியின் காதல் வலையில் சிக்கிய பெண் டாக்டர்!

''சமூக வலைதளங்கள்ல வர்ற கிண்டல்களை தடுக்க, போலீசை அணுக முடிவு பண்ணியிருக்காங்ணா...'' என, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார் கோவை, கோவாலு.''எந்தக் கட்சிக்காரங்களைச் சொல்லுதீரு...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.''தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தை, ஆரம்பத்துல, 'மீம்' போட்டு, சமூக வலைதளங்கள்ல கடுமையா கிண்டல் பண்ணிட்டு இருந்தாப்புல... இப்ப உடம்பு சரியில்லாம, 'ஆக்டிவ்' அரசியல்ல இருந்து ஒதுங்கிட்டதால, அவரை விட்டுட்டாங்ணா...''இப்ப, பிரேமலதா அம்மணி தான், கூட்டணி பேச்சு, பிரசாரம்னு, கட்சியை வழிநடத்திட்டு இருக்காங்ணா... அவங்களை கிண்டலடிச்சு, மீம்ஸ்களை போட்டு தாளிக்கிறாங்க... ''இதனால, எரிச்சல்ல இருக்கிற அவங்க, இது சம்பந்தமா, சைபர் கிரைம் போலீஸ்ல புகார் குடுக்க இருக்காங்ணா...'' என்றார் கோவாலு.''வேகாத வெயில்ல, எல்லாரும் வியர்வை மழையில நனைஞ்சிட்டு இருக்கறச்சே, டாலர் சிட்டி போலீசார், மாமூல் மழையில குளிச்சுண்டு இருக்கா ஓய்...'' என்றார் குப்பண்ணா.''விளக்கமா சொல்லுங்க பா...'' என்றார் அன்வர்பாய்.''திருப்பூர்ல, சமீபகாலமா, கள்ள லாட்டரி, கஞ்சா, சேவல் கட்டு, சீட்டாட்டம், கள்ள மார்க்கெட்ல மது விற்பனைன்னு எல்லா சட்டவிரோத செயல்களும், சக்கை போடு போடறது... அப்பப்ப ஒண்ணு, ரெண்டு கேஸ்களை பிடிச்சாலும், போலீசார், கம்மியாவே கணக்கு காட்டறா ஓய்...''சிட்டி போலீஸ் கமிஷனருக்கு தமிழ் தெரியாதுங்கறதால, உளவுத் துறை போலீசாரும், அவர் காதுக்கு, முறையா தகவல்களை சேர்க்கறது இல்லை... ''அவரும் வெளியில, அவ்வளவா தலை காட்டாம இருக்கறதால, ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர்கள் எல்லாம், குறுநில மன்னர்கள் மாதிரி ராஜாங்கம் நடத்தி, தங்களது கஜானாவை நிரப்பிண்டு இருக்கா ஓய்...'' என்றார் குப்பண்ணா.''ஒரு ஏடாகூடமான காதல் கதையை கேளுங்க...'' என, 'கிளுகிளு' தகவலுடன், கடைசி விஷயத்தை பேச ஆரம்பித்தார் அந்தோணிசாமி...''நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த, தி.மு.க., 'மாஜி' அமைச்சர் ஆலடி அருணா, 2004ல வெட்டிக் கொலை செய்யப்பட்டாரே... ''இந்த வழக்குல, சிக்குனவங்கள்ல, மதுரை ரவுடி, 'வளர்ந்த' அழகரும் ஒருத்தன்... இவனுக்கு, முதல்ல துாக்கு தண்டனை விதிச்சு, அப்புறம், ஆயுள் தண்டனையா குறைச்சாங்க...''பாளையங்கோட்டை ஜெயில்ல இருந்தவன், தன் உயிருக்கு ஆபத்துன்னு அலற, சென்னை, புழல் ஜெயிலுக்கு மாத்தினாங்க... ஜெயிலுக்குள்ள இருக்கிற மருத்துவமனைக்கு, உடம்பு சரியில்லைன்னு அடிக்கடி போயிட்டு வந்திருக்கானுங்க...''சிறை அதிகாரிகள் சந்தேகப்பட்டு விசாரிச்சப்ப, அங்க வேலை பார்க்கிற பெண் டாக்டரை, 'லவ்' பண்றது தெரிய வந்திருக்கு... ''ரவுடியை பத்தி, டாக்டரம்மா காதுல எவ்வளவோ போட்டும், காதல்ல அவங்க ரொம்ப ஸ்டிராங்கா இருக்காங்களாம்... இதுல என்ன வேடிக்கைன்னா, ரெண்டு பேருக்குமே, கல்யாணம் ஆகி, குடும்பங்கள் இருக்குங்க...'' என்றார் அந்தோணிசாமி.''கலி முத்திடுத்து... வேற என்ன சொல்றது...'' என, தலையில் அடித்தபடி குப்பண்ணா எழ, மற்றவர்களும் கிளம்பினர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (4)

  • A R J U N - PHOENIX ....ARIZONA..,யூ.எஸ்.ஏ

  • சுந்தரம் - Kuwait,குவைத்

    சகிச்சுக்கிட்டுத்தான் ஆகணும்.

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    சிறை மருத்துவரையே மனச் சிறையில் அடைத்துவிட்ட கில்லாடி கைதி

Advertisement