Advertisement

தினமும் ரூ.10 லட்சம் அள்ளும் பொதுப்பணி அதிகாரி!

தினமும் ரூ.10 லட்சம் அள்ளும் பொதுப்பணி அதிகாரி!

''நாயரே, பால் கலக்காத காபி போடும்...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்த குப்பண்ணா, ''பட்டியல்ல பெயர் இல்லாம, பட்டிமன்றமே நடந்துண்டு இருக்கு ஓய்...'' என, அன்றைய அரட்டையை ஆரம்பித்தார்.''என்ன பட்டியலுங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.''காலியா இருக்கற, நாலு சட்டசபை தொகுதிகளுக்கு, மே, 19ல இடைத்தேர்தல் நடக்கறதோல்லியோ... ஒவ்வொரு தொகுதிக்கும், தி.மு.க.,வின் மாவட்டச் செயலர்கள், எம்.எல்.ஏ.,க்கள், முன்னாள் அமைச்சர்கள்னு, பலரையும் பொறுப்பாளரா போட்டிருக்கா ஓய்...''இதுல, திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலர் வேணுவை மட்டும் காணோம்... 'லோக்சபா தேர்தல்ல, அ.தி.மு.க., வேட்பாளர் வேணுகோபாலுக்கு, இவர் ரகசியமா ஒத்தாசை பண்ணினதா, காங்., வேட்பாளர் ஜெயகுமார், ஸ்டாலினிடம் புகார் சொல்லிட்டார்... அதான், அவரை இடைத்தேர்தல் ஆட்டத்துல கழற்றி விட்டுட்டா'ன்னு ஒரு தரப்புல சொல்றா ஓய்...''மற்றொரு தரப்பு, உடம்பு சரியில்லாததால, வேணுவை, ஸ்டாலினே ஓய்வு எடுக்க சொால்லிட்டதா சொல்றா... எது உண்மைன்னு தெரியாம, தொண்டர்கள், தலையை பிச்சிண்டு இருக்கா ஓய்...'' என்றார் குப்பண்ணா.''வாய் தவறி கூட, பிரதமர் பெயரை முன்மொழிய மாட்டேங்கிறாங்ணா...'' என, அடுத்த தகவலை ஆரம்பித்தார் கோவை, கோவாலு.''எந்த கட்சியினரை சொல்லுதீரு...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.''திருப்பூர் தொகுதி, இந்திய, கம்யூ., வேட்பாளரை ஆதரிச்சு நடந்த பிரசாரத்துல பேசிய, ஸ்டாலின், 'ராகுலை பிரதமராக்கணும்'னு பேசினார்... ஆனா, அந்த மேடையில பேசிய, கம்யூ., தலைவர்கள் யாரும், அதை பத்தி வாயே திறக்கலைங்களாமா...''சரி... அதாவது போகட்டும்... அந்த கட்சியின் பொதுச் செயலர் சுதாகர் ரெட்டி, கோவையில, சமீபத்துல பத்திரிகைகளுக்கு பேட்டி தந்தாப்புல... பிரதமர் பதவி பத்தி கேட்டப்ப, 'அதெல்லாம் தேர்தல் முடிஞ்ச பிற்பாடு, கூட்டணி கட்சிகள் சேர்ந்து, முடிவு பண்ணுவோம்'னு நழுவிட்டு போயிட்டாருங்ணா...'' என்றார் கோவாலு.''தினமும், 10 லட்சம் ரூபாய் அள்ளிட்டு இருக்காரு பா...'' என, கடைசி தகவலுக்குள் நுழைந்தார் அன்வர்பாய்.''யாருங்க அது...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.''திருவள்ளூர் மாவட்டத்துல, பேரம்பாக்கம் ஏரி, பெருங்காவூர் ஏரி, சிவன்வாயல் ஏரிகள்ல, நீர்வரத்துக்கு தடையா இருக்கிற மண் திட்டுகளை அகற்றுகிறோம்கிற பெயர்ல, சவுடு மண் மற்றும் மணல் கொள்ளை நடக்குது பா...''இதுக்காக, பொதுப்பணி துறை அதிகாரி ஒருத்தர், தன் பெயர்லயே, 92 லட்சம் ரூபாயை, மாவட்ட வருவாய் கணக்குல, ஸ்டேட் வங்கியில கட்டியிருக்கார்... ''இதனால, அதிகாரி பெயர்லயே வேலைக்கான உத்தரவையும் வாங்கி, இந்த ஏரிகள்ல இருந்து, தினமும், 6,000 லோடு சவுடு மண்ணும், மணலையும் அள்ளியிருக்காங்க... இப்படி, மார்ச் மாசம் மட்டும் அதிகாரிக்கு, தினசரி, 10 லட்சம் ரூபாய் வீதம், கோடிக்கணக்குல சுளையா கிடைச்சிருக்கு பா...'' என்றார் அன்வர்பாய்.''முத்தையா வாரும்... பஜ்ஜி சாப்பிடும்...'' என, நண்பரை உபரித்தபடியே, அண்ணாச்சி கிளம்ப, மற்றவர்களும் எழுந்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • Darmavan - Chennai,இந்தியா

  • Darmavan - Chennai,இந்தியா

    இப்படி தின மலருக்கு தெரிந்த திருட்டு அரசுக்கு தெரியாதா?இல்லைத்தெரிந்தே நடக்கிறதா?

  • truth tofday - india,இந்தியா

    எந்த அரசாங்க டெண்டரை யம் ON லைன் மூலம் எல்லோருக்கும் பொதுவாக எலாம் விட்டால் எல்லோரும் டெண்டர் எடுக்க விதிகளை மாற்றினால் இது போல கொள்ளை நடக்காது ஓபன் டெண்டர்களலால் மட்டும் அரசனாக வருமானம் பெருகும் மேலும் நடுத்தர மக்கள் பங்கேற்குமாறு சிறிய சிறிய டெண்டர்களை விட வேண்டும்

Advertisement