Advertisement

தேர்தல் ஆணைய உத்தரவு மீறல்: போலீசாருக்கு 12 மணி நேர பணி

திருநெல்வேலி: நெல்லை லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணும் மையத்தில், 12 மணி நேரம் பணிபுரிய வேண்டியிருப்பதால், போலீசார் அதிருப்தியில் உள்ளனர்.

தமிழகத்தில், 18ம் தேதி லோக்சபா தேர்தல் நடந்தது. 38 தொகுதிகளின் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், ஓட்டு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. மே 23ல், ஓட்டு எண்ணிக்கை நடக்க உள்ளது.திருநெல்வேலி மாவட்டத்தில், நெல்லை தொகுதி இயந்திரங்கள், நெல்லை அரசு பொறியியல் கல்லூரி மையத்திலும், தென்காசி தொகுதி இயந்திரங்கள், குற்றாலம் பராசக்தி பெண்கள் கல்லுாரி மையத்திலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.மையங்களில், துணை ராணுவம், பட்டாலியன் மற்றும் உள்ளூர் போலீஸ் என, மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள மையங்களில், பாதுகாப்பு பணியில் ஈடுபடும் துணை ராணுவம், பட்டாலியன், உள்ளூர் போலீசார் ஆகியோர், எட்டு மணி நேரம் பணி அடிப்படையில், மூன்று, 'ஷிப்ட்'களாக பணியாற்றுகின்றனர்.நெல்லை மையத்தில், இரண்டு நாட்களாக, உள்ளூர் போலீசார், 12 மணி நேரம் அடிப்படையில், இரண்டு ஷிப்ட் முறையில், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அதே நேரம், துணை ராணுவம், பட்டாலியன், வழக்கம் போல் மூன்று ஷிப்ட் முறையில், பணியாற்றுகின்றனர்.கூடுதல் பணிப்பளுவால், உள்ளூர் போலீசார் மிகுந்த மன உளைச்சலில் தவிக்கின்றனர். 'தேர்தல் பிரிவு அதிகாரிகள் தலையிட்டு, எங்கள் பணி நேரத்தை குறைக்க வேண்டும்' என, அவர்கள் கூறினர்.தீவிர சோதனை
மதுரை ஓட்டு எண்ணும் மையத்தில் நுழைந்த பெண் தாசில்தார், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ள நிலையில், அனைத்து ஓட்டு எண்ணும் மையங்களிலும், பாதுகாப்பு சோதனைகள் தீவிரமாகி உள்ளன.நெல்லை அரசு பொறியியல் கல்லுாரியில் பணிபுரியும் பேராசிரியர்கள், மாணவர்கள் கடும் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். மேலும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள உள்ளூர் போலீசாரின் இருசக்கர வாகனங்களும், கல்லுாரி வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவதில்லை. கல்லுாரிக்கு வெளியிலேயே நிறுத்தப்படுகின்றன.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement