Advertisement

ரூ.350 லஞ்சம் பெற்ற ஏட்டுக்கு 3 ஆண்டுகள் சிறை

நாகர்கோவில்:தக்கலை அருகே,பாஸ்போர்ட் விசார ணைக்கு, 350 ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கில், 'மாஜி' ஏட்டுக்கு, மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம், திருவிதாங்கோடைச் சேர்ந்தவர் யாசர். இவர், வெளிநாடு செல்ல பாஸ்போர்ட்டுக்கு, விண்ணப்பம் செய்திருந்தார். 2005ல் தக்கலை காவல் நிலையத்தில் ஆவணங்கள் சரிபார்ப்புக்கு வருமாறு யாசர் அழைக்கப்பட்டார்.காவல் நிலையத்துக்கு சென்ற போது, பணியில் இருந்த, தலைமை காவலர் சூசை மைக்கேல் விசாரணையை முடித்து தர, 350 ரூபாய் லஞ்சமாக கேட்டு உள்ளான்.


இது குறித்து யாசர், நாகர்கோவில் ஊழல் கண்காணிப்பு மற்றும் லஞ்ச தடுப்புப் பிரிவு போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.லஞ்சப் பணத்தை சூசை மைக்கேல், யாசரிடம் இருந்து பெறும் போது, அவனை போலீசார் கைது செய்தனர்.கடந்த 14 ஆண்டுகளாக, இந்த வழக்கு, நாகர்கோவில் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.நீதிபதி பாண்டியராஜ், மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் சூசைமைக்கேலுக்கு, 65, விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement