Advertisement

மீனவர் கொலையில் 4 பேர் கைது

நாகர்கோவில்: கன்னியாகுமரி அருகே மேல மணக்குடி சேர்ந்த மீனவர் வின்சென்ட், 34. இவர், கடந்த, 23 இரவில் மனைவி, குழந்தைகளுடன் வீட்டின் வெளியே தூங்கினார்.அப்போது கீழ மணக்குடியை சேர்ந்த கிதியோன், 37, டார்ச் லைட்டை வின்சென்ட் மனைவி மீது அடித்தார். இது தொடர்பாக வின்சென்ட், கிதியோன் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.இதில் ஆத்திரமடைந்த கிதியோன், தன் நண்பர்களுடன் சேர்ந்து, வின்சென்டை அரிவாளால் வெட்டி கொலை செய்தான். இது குறித்து, வழக்கு பதிவு செய்த சுசீந்திரம் போலீசார், கிதியோன் உட்பட எட்டு பேர் கும்பலை தேடி வந்தனர்.இந்நிலையில், நேற்று, 18 - 49 வயதுள்ள நான்கு பேரை சுசீந்திரம் போலீசார் நாகர்கோவில் கோர்ட் அருகே கைது செய்தனர்
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement