Advertisement

ஸ்கேன் மையத்தில் கர்ப்பிணி பலி

நாகர்கோவில்: குமரி மாவட்டம், பத்மநாபபுரம் பகுதியை சேர்ந்தவர் கோபகுமார், 38. இவரது மனைவி அனிதாகுமாரி, 33. கர்ப்பிணியான இவரை, நேற்று நாகர்கோவில் அருகே, ஒரு ஸ்கேன் மையத்துக்கு, அவரது பெற்றோர் அழைத்து சென்றனர். ஸ்கேன் எடுத்தவர்கள், அனிதாகுமாரியின் வயிற்றில் உள்ள குழந்தை சரியாக வளர்ச்சி அடையவில்லை என கூறியதாக தெரிகிறது.இதில் அதிர்ச்சி அடைந்த அவர், ஸ்கேன் மையத்திலேயே மயங்கி விழுந்தார். உடனே அவரை, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள், அனிதாகுமாரி உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். தக்கலை போலீசார், விசாரிக்கின்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement